மகனை பராமரிப்பது தந்தையின் பொறுப்பு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : 'விவாகரத்து ஆன பிறகும், 18 வயது வரை மகனை பராமரிப்பது தந்தையின் பொறுப்பு' என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.ராணுவ மேஜரின் கள்ளத் தொடர்பு காரணமாக அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற மனைவி தொடர்ந்த வழக்கில், மகனின் பராமரிப்பு செலவிற்காக தந்தை மாதம், 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சில மாதங்கள் பராமரிப்பு
SC, Court, Supreme Court, சுப்ரீம் கோர்ட், தீர்ப்பு

புதுடில்லி : 'விவாகரத்து ஆன பிறகும், 18 வயது வரை மகனை பராமரிப்பது தந்தையின் பொறுப்பு' என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.

ராணுவ மேஜரின் கள்ளத் தொடர்பு காரணமாக அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற மனைவி தொடர்ந்த வழக்கில், மகனின் பராமரிப்பு செலவிற்காக தந்தை மாதம், 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சில மாதங்கள் பராமரிப்பு தொகை வழங்கிய மேஜர், பின் பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டார். இதையடுத்து மனைவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


latest tamil news


இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விபரம்:குடும்ப நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்பு சரியானதே. மகனுக்கு 18 வயது ஆகும் வரை பராமரிக்கும் பொறுப்பு தந்தைக்கு உள்ளது. அதனால், 2019 டிச., முதல், நடப்பாண்டு நவ.,30 வரை நிறுத்தப்பட்ட பராமரிப்பு தொகையை எட்டு வாரங்களுக்குள் தந்தை வழங்க வேண்டும். தாயின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு வழங்காத பட்சத்தில், நிலுவையுடன், பராமரிப்பு தொகையை சேர்த்து கணக்கிட்டு, மாதத் தவணையாக தந்தையின் ஊதியத்தில் ராணுவ நிர்வாகம் பிடித்தம் செய்து, தாயின் வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
02-டிச-202114:21:51 IST Report Abuse
Sivagiri அப்புறம் என்ன ? மகனை காப்பாத்த வேண்டியது அய்யாவோட கடமைதான்னு சுப்ரீம் கோர்ட் சொல்லீருச்சு... இனிமே யாரும் வாரிசு அரசியல் பத்தி பேசிக் கூடாது... ஆனாலும் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வச்சு காப்பாத்தணும்னு சொல்லலையே?
Rate this:
Cancel
Ramesh - chennai,இந்தியா
02-டிச-202113:04:06 IST Report Abuse
Ramesh நம் நீதிமன்றமே பெண் கள்ள தொடர்பு கள்ளம் இல்லை அவள் உடம்பு அவள் இஸ்டம்.கணவன் குறுக்கே வர்ற உரிமை இல்லை என சொல்லிவிட்டது. ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
02-டிச-202111:10:24 IST Report Abuse
pattikkaattaan ராணுவ மேஜர் - கள்ள தொடர்பு ... இந்தமாதிரி ஆளுங்க கையிலதான் நாட்டின் பாதுகாப்பு இருக்கு என்று நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு ..
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
02-டிச-202116:23:48 IST Report Abuse
சீனிபாக்கிஸ்தான் எல்லைய பாதுகாப்பார்னு நினைச்சு வேலைக்கு சேர்த்தா, பக்கத்து வீட்ட குறி பாத்திருக்காரு... ஹாஹாஹா.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X