சிறுமி பலாத்கார வழக்கு: 'மாஜி' பாதிரியாருக்கு தண்டனை குறைப்பு

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
திருவனந்தபுரம் : சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், 'மாஜி' பாதிரியாருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை, 10 ஆண்டாக குறைத்து, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கேரளாவில் கொட்டியூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ராபின் வடக்கம்சேரி. சில ஆண்டுகளுக்கு முன் அந்த தேவாலயத்தில் பணிபுரிந்து வந்த ஒரு சிறுமியை ராபின் பலாத்காரம்
Kottiyoor rape case, Robin Vadakkumcherry, Kerala sexual abuse

திருவனந்தபுரம் : சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், 'மாஜி' பாதிரியாருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை, 10 ஆண்டாக குறைத்து, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரளாவில் கொட்டியூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ராபின் வடக்கம்சேரி. சில ஆண்டுகளுக்கு முன் அந்த தேவாலயத்தில் பணிபுரிந்து வந்த ஒரு சிறுமியை ராபின் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து, ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.

இதுகுறித்த புகார் அடிப்படையில் 2017ல் ராபினை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் பாதிரியார் பணியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த 2019ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம் குற்றவாளியான ராபின் வடக்கம்சேரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ராபின் வடக்கம்சேரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


latest tamil news



இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாராயண் பிஷோரடி, ராபின் வடக்கம்சேரிக்கு, கீழ் நீதிமன்றம் விதித்த 20 ஆண்டு சிறை தண்டனையை, 10 ஆண்டாக குறைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே, ராபின் வடக்கம்சேரியால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தற்போது, 18 வயது முடிந்துவிட்டது.

சமீபத்தில் அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'என்னை பலாத்காரம் செய்த ராபின் வடக்கம்சேரியை திருமணம் செய்ய விரும்புகிறேன். அதனால், அவருக்கு, 'ஜாமின்' வழங்க வேண்டும்' என கூறியிருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
02-டிச-202119:48:41 IST Report Abuse
Vijay D Ratnam சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் செய்தது பச்சை அயோக்கியத்தனம் என்றால் கேரள உயர்நீதிமன்றம் செய்திருப்பது என்ன? அப்போ சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் பத்து ஆண்டுகள், மேஜர் ஆன பெண்ணை பலாத்காரம் செய்தால் ஏழு ஆண்டுகள், திருமணம் ஆன பெண்ணை பலாத்காரம் செய்தால் ஐந்து ஆண்டுகள், குழந்தை பெற்ற பெண்ணை பலாத்காரம் செய்தால் இரண்டு ஆண்டுகள் என்று ட்யுரேஷன் பிக்ஸ் செய்வார்களோ. மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்கள்தான் ஆர்எஸ்பி தரச்சான்றிதழ் பெற்றுவிட்டது, தம்படிக்கு ப்ரயோஜனமில்லாத விஷயத்துக்கெல்லாம் தாண்டிக்குதிக்கும் இந்த மகளிர் அமைப்புகள் கமுக்கமா இருப்பது ஏன்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-டிச-202117:42:19 IST Report Abuse
J.V. Iyer நீதிமன்றம் ஏன் எப்போதும் ஒருசாராருக்கே வக்காலத்து வாங்குகிறது?
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
02-டிச-202115:38:41 IST Report Abuse
Ramalingam Shanmugam பணம் செய்யும் வேலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X