இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்': மருமகள் கழுத்தறுத்து கொலை மாமனார் போலீசில் சரண்

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்அரிவாளால் பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவர் கண்டக்டரை தாக்கிய ரவுடிகள் கடலுார்-பைக்கை முந்திச்சென்றதால், பஸ் கண்ணாடியை அரிவாளால் உடைத்து, டிரைவர், கண்டக்டரை தாக்கிய 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் மாலை தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. ரெட்டிச்சாவடி அடுத்த பெரியகாட்டுபாளையம்தமிழக நிகழ்வுகள்
அரிவாளால் பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவர் கண்டக்டரை தாக்கிய ரவுடிகள்
latest tamil newsகடலுார்-பைக்கை முந்திச்சென்றதால், பஸ் கண்ணாடியை அரிவாளால் உடைத்து, டிரைவர், கண்டக்டரை தாக்கிய 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் மாலை தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. ரெட்டிச்சாவடி அடுத்த பெரியகாட்டுபாளையம் அருகே 3 பேர் இரண்டு பைக்கில் வந்தனர்.அவர்களை பஸ் முந்தி சென்றது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் பஸ்சை முந்திசென்று பைக்கை குறுக்கே நிறுத்தினர். இளநீர் விற்றுக் கொண்டிருந்த இடத்தில் இருந்து அரிவாளை எடுத்து வந்து பஸ் கண்ணாடியை உடைத்தனர். மேலும் டிரைவர் தேசிங்கு, கண்டக்டர் நவீன்குமார் ஆகியோரை தாக்கினர்.

கண்டக்டரிடம் இருந்த ரூ.1,200 பணத்தை பறித்துக்கொண்டு தப்பினர்.புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்குப்பதிந்து, ரகளையில் ஈடுபட்ட பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்த கதிர்வேல் மகன் சீனிவாசன், 21; ஜெயமூர்த்தி மகன் பிரித்திவிராஜன், 22; புதுச்சேரி மாநிலம் பாகூரைச்சேர்ந்த வேம்பன் மகன் மருதநாயகம், 22; ஆகியோரை கைது செய்தனர். இதில் பிரித்திவிராஜன் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 5 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று மதியம் 12:45 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. மாலை 4:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட வேண்டும் என்பதால், பட்டர்கள் 3:30 மணிக்கு வந்தனர். அர்த்த மண்டப கதவை திறந்தபோது தரையில் விரிக்கப்பட்டிருந்த 'மேட்' தீப்பிடித்து புகைந்து கொண்டிருந்தது. உடனடியாக தீ அணைக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தன.
முதற்கட்ட விசாரணையில், மண்டபத்தில் சரவிளக்கு ஒன்றின் திரி பட்டு எரிந்திருக்கலாம் என தெரிந்தது. அர்த்த மண்டபத்தில் எலி தொந்தரவு உள்ளது. நெய் தீபத்திரியை எடுத்து வரும்போது 'மேட்' டில் பட்டு தீப்பிடித்திருக்கலாம் என்கின்றனர்.
ஏற்கனவே 2018 பிப்ரவரியில் வீரவசந்தராய மண்டபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தீ விபத்து ஏற்பட்டிருப்பது கோவில் நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


மருமகள் கழுத்தறுத்து கொலை மாமனார் போலீசில் சரண்latest tamil newsதிருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே ஜங்கலாபுரத்தைச் சேர்ந்தவர் மணி, 60; விவசாயி. இவரது மனைவி இறந்து விட்டார். மகன் சிவன், 36; காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முருகம்மாள், 32. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
முருகம்மாள் 2018ல் கஜநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் போலி சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்தது தெரிந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.கணவரை பிரிந்த முருகம்மாள், கஜல்நாயக்கன்பட்டியில் குழந்தைகளோடு தனியாக வசித்து வந்தார்.

அப்போது, முருகம்மாளுக்கு சிலருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக மாமனார் மணி குற்றஞ்சாட்டினார். நேற்று முன்தினம் இரவு முருகம்மாள், மாமனார் வீட்டுக்கு வந்தார். நேற்று காலை முருகம்மாளுடன் மணி தகராறு செய்தார். மதியம் 1:00 மணிக்கு நாட்றம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கு கத்தியுடன் வந்த மணி, மருமகளை கொலை செய்து விட்டதாக கூறி, சரண் அடைந்தார்.
மணி அளித்த வாக்குமூலத்தில், 'என் மகனுக்கு துரோகம் செய்து, பல பேருடன் கள்ளத் தொடர்பு வைத்த ஆத்திரத்தில், மருமகளை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன்' என தெரிவித்துள்ளார்.போலீசார், மணியை கைது செய்தனர்.


போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்ற வாலிபர் கைதுதிருச்சி விமான நிலையத்தில் இருந்து, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு துபாய் செல்வதற்காக வந்த வாலிபரின் பாஸ்போர்ட்டை, இமிகிரேஷன் அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.

அதில், போலி பெயர் மற்றும் முகவரியில் பாஸ்போர்ட் எடுத்திருப்பதை கண்டுபிடித்தனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம், சல்லிமலை பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் மகனான முஜிபூர் ரகுமான், 32, என்ற அவர், முகமத் முஜிபூர் என்ற போலி பெயரில் பாஸ்போர்ட் எடுத்து, அதன் மூலம் வெளிநாடு செல்ல இருந்தது தெரிய வந்தது.திருச்சி விமான நிலைய போலீசில் இமிகிரேஷன் அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, வாலிபரை கைது செய்தனர்.


மின் திருட்டு ரூ.6 லட்சம் அபராதம்மதுரை : மதுரை மண்டலத்தில் பல பகுதிகளில் மின்வாரிய அதிகாரிகள் நடத்திய சோதனையில் மதுரை கிழக்கு, உசிலம்பட்டி, சமயநல்லுார் மற்றும் திருமங்கலம் என 9 இடங்களில் மின் திருட்டு கண்டுபிடித்து,
ரூ.6,33,096 அபராதம் விதித்தனர்.மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டவர்களிடம் ரூ.56,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. மின் திருட்டு பற்றிதெரிய வந்தால் 94430 37508 என்ற அமலாக்க பிரிவு அலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். தகவல் ரகசியமாக வைக்கப்படும் என மதுரை மண்டல மின்வாரிய அமலாக்க பிரிவு செயற் பொறியாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; டாக்டருக்கு காவல் நீட்டிப்புகரூர்:கரூரை சேர்ந்தவர் ரஜினிகாந்த், 55; எலும்பு முறிவு டாக்டர். இவர், 17 வயதுடை தன்னுடைய மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த மாதம், 13ல் கரூர் மகளிர் போலீசில் தாய் புகார் செய்தார்.
இதையடுத்து, ரஜினிகாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, 17ல் கைது செய்து, 15 நாள் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். நேற்றுடன் நீதிமன்ற காவல் நிறைவு பெற்றதையொட்டி ரஜினிகாந்தை போலீசார் சிறையில் இருந்து அழைத்து வந்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு,வரும், 15 வரை டாக்டரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


காளையார்கோவிலில் கழுத்தறுத்து வாலிபர் கொலைசிவகங்கை அருகே கீழக்குளம் காளிமுத்து மகன் பிரவீன் 24. இவர் தன் நண்பர்களுடன் காளையார்கோவில் அருகே பெரிய கண்ணனுாரில் கிராம பொது கூடத்தில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சிவகங்கை எஸ்.பி., செந்தில்குமார், டி.எஸ்.பி., பால்பாண்டி விசாரித்தனர். 2019ல் திருப்பாச்சேத்தி அருகே மாத்துாரில் பிரசாந்த் 24, என்பவரை பிரவீன் கொலை செய்து தலைமறைவானார். இதற்கு பழி தீர்க்கபிரசாந்தின் சகோதரர் மாத்துார் ஊர்க்காவலன் 27, நேற்று பெரியகண்ணனுாரில் பிரவீனை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


ரூ.34,000 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைதுதர்மபுரி:ஓய்வூதிய நிலுவை தொகை வழங்க, 34 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, வனத் துறை இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வனவர் சின்னச்சாமி. இவரும், இவரது மனைவியும் இறந்து விட்டனர். கணவரை இழந்த இவர்களது மகள் சாந்தி, வனத் துறை சார்பில் ஓய்வூதியம் பெற்று வருகிறார். கடந்த 2007 - 2010 வரையிலான ஓய்வூதியம், 4 லட்சம் ரூபாய் நிலுவையில் இருந்தது.
இதை வழங்கும்படி, தர்மபுரி மாவட்ட சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட வன அலுவலகத்தில், இளநிலை உதவியாளர் பழனிசாமி, 54, என்பவரை அணுகினார்.பழனிசாமி, 34 ஆயிரத்து 410 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
நேற்று மாலை, 4:00 மணிக்கு அலுவலகத்தில் இருந்த பழனிசாமியிடம் சாந்தியின் உறவினர் முருகன் 34 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார், பழனிசாமியை கைது செய்தனர்.
அதிரடி சோதனை
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நவம்பர் 29ல், ஐந்து ஒன்றியங்களின் உள்ளாட்சி கணக்கு தணிக்கை நடந்தது. இதில் லஞ்ச பணம் கைமாறுவதாக கிடைத்த தகவல்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து, கணக்கில் வராத 88 ஆயிரத்து 600 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில், உள்ளாட்சி துறை தணிக்கை குழு உதவி இயக்குனர் முகமது லெப்பையும் ஒருவர்.திருநெல்வேலி என்.ஜி.ஓ., காலனியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். சொத்து ஆவணங்கள், நகைகள் வாங்கிய பில், வங்கி கணக்கு புத்தகங்களை கைப்பற்றினர்.


போலி வைரக்கல் விற்று நுாதன திருட்டுlatest tamil news


Advertisement


ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில், போலி வைர நகையை காட்டி, கான்ட்ராக்டரிடம் 8 சவரன் நகையை ஏமாற்றி பறித்த மூன்று பேரை போலீசார் தேடுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்தவர் கண்ணன், 51; கட்டுமான பணி ஒப்பந்ததாரர். ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகே, மொபைல் போன் ரீசார்ஜ் கடைக்கு நேற்று சென்றார்.அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், நகைக்கற்களை பரிமாறி கொண்டனர். இது குறித்து கண்ணன் விசாரித்த போது, மர்ம நபர், வைரக்கல் நகைகளை குறைந்த விலையில் விற்பதாக கூறியுள்ளார். தன்னிடம் இருந்த காகித பொட்டலத்தை பிரித்து, நகையை சில வினாடிகள் மட்டும் காட்டி மூடிவிட்டார்.

இதை நம்பிய கண்ணன், தான் அணிந்திருந்த மோதிரம், ஒரு செயின் என, 8 சவரன் மதிப்புடைய தங்க நகைகளை கழற்றி, அந்த மர்ம நபரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பதிலுக்கு அந்த நபர், வைரக்கல் பதித்த நகை இருப்பதாக கூறிய காகித பொட்டலத்தை கொடுத்துள்ளார். வீட்டிற்கு சென்ற கண்ணன், காகித பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது, பெண்கள் தலையில் ஆபரணமாக அணியும், 20 ரூபாய் மதிப்புடைய சாதாரண கல் பதித்த சங்கிலி என்பதை அறிந்தார். வைரத்தை விற்றவரும், அதை வாங்கிய இருவரும் சேர்ந்து தன்னை நுாதன முறையில் ஏமாற்றியதை உணர்ந்து, ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


மாணவியருக்கு ஆபாச 'மெசேஜ்' 'காமுக' பேராசிரியர் கைதுசென்னை : கோயம்பேடில், தனியார் கல்லுாரி மாணவியருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர், மாணவ - மாணவியரின் இரண்டு நாள் போராட்டத்திற்கு பின் கைது செய்யப்பட்டார்.

சென்னை, கோயம்பேடு, நியூ காலனியில் தனியார் கலைக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இங்கு திருமழிசையை சேர்ந்த தமிழ்ச்செல்வன், 40, என்பவர் ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்தார்.'ஆன்லைன்' வகுப்பின் போதும், கல்லுாரி நேரங்களிலும் மாணவியரின் மொபைல் போன் எண்ணிற்கு, தமிழ்ச்செல்வன் ஆபாச குறுந்தகவல் அனுப்பி, பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து, நேற்று முன்தினம் மாணவியர் கல்லுாரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.


latest tamil news


தொடர்ந்து, உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதையடுத்து, பேராசிரியர் தமிழ்ச்செல்வன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.இந்நிலையில், நேற்று காலை கல்லுாரிக்கு வந்த மாணவ - மாணவியர் 150க்கும் மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து கல்லுாரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கு ஆதரவு தெரிவித்து, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, பேராசிரியரை கைது செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். சம்பவ இடத்திற்கு சென்ற கோயம்பேடு போலீசார் மாணவர்களிடம் சமரசம் பேசினர்.ஆனால், பேராசிரியரை கைது செய்யும் வரை ஆர்ப்பாட்டத்தை கைவிட மாட்டோம் என, மாணவர்கள் உறுதியாக இருந்தனர்.இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியர் அளித்த புகாரின்படி, கல்லுாரி நிர்வாகம் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தமிழ்ச்செல்வன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்ததையடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.இந்நிலையில், மொபைல் போன் டவர் வாயிலாக, போரூரில் பதுங்கியிருந்த தமிழ்ச்செல்வனை, கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.


மின்சாரம் பாய்ந்து மாணவன் மரணம்கோவிலம்பாக்கம்--தண்ணீரை வாட்டர் ஹீட்டரில் சுடவைத்த போது, மின்சாரம் பாய்ந்து பிளஸ் 1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.சென்னை, கோவிலம்பாக்கம், சத்யா நகர், 7வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ்.


latest tamil news


இவரது மகன் ஷியாம், 15. அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.நேற்று காலை மின்சார 'வாட்டர் ஹீட்டர்' வாயிலாக தண்ணீர் சுடவைத்தார். சற்று நேரத்தில் தண்ணீர் சுட்டுவிட்டதா என அறிய, பாத்திரத்தில் கை வைத்தபோது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.

பெற்றோர், உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மகனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஷியாம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்திய நிகழ்வுகள்
விபசார தொழில் நடத்தியவர் கைது; கொல்கத்தா, புதுச்சேரி பெண்கள் மீட்புபுதுச்சேரி-புதுசாரம் பகுதியில் வாடகை வீடு எடுத்து, விபசார தொழில் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். கொல்கத்தா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இரு பெண்களை மீட்டனர்.புதுச்சேரி புதுசாரம், சுதந்திர பொன்விழா நகர், ஐ பிளாக் குடியிருப்பில் தங்கியுள்ள 2 பெண்கள், தினந்தோறும் ஆட்டோக்களில் வெளியாட்களுடன் சென்று, நள்ளிரவு மற்றும் அதிகாலையில் வீடு திரும்புவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கோரிமேடு போலீசார் நேற்று முன்தினம் மாலை, அக்குடியிருப்பில் சந்தேகத்திற்குரிய பெண்கள் தங்கியுள்ள அறையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ரெட்டியார்பாளையம் தபால் நிலைய வீதியைச் சேர்ந்த அந்தோணி, 38; என்பவர், இரு பெண்களை சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்பில் வாடகை வீட்டில் தங்க வைத்து, விபசார தொழில் நடத்தி வருவது தெரிந்தது.

மொபைல்போன் மூலம் அழைக்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வீடு, ஓட்டல் அறைக்கு, விபசாரத்திற்கு பெண்களை அனுப்பி வந்துள்ளார். அந்தோணியை கைது செய்த போலீசார், மூன்று மொபைல் போன், ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை சேர்ந்த பெண் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண் ஆகிய இருவரை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


latest tamil newsஇறந்ததாக கருதப்பட்டு அடக்கம் செய்யப்பட்டவர், உயிரோடு திரும்பியதால் அதிர்ச்சிதுமகூர் : மூன்று மாதத்துக்கு முன் இறந்தாக கருதப்பட்டு அடக்கம் செய்யப்பட்டவர், உயிரோடு திரும்பியதால் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
துமகூரு மதுகிரி அருகே உள்ள சிக்கமாலுாரு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜப்பா, 60. இவர் 12 ஆண்டுக்கு முன் திடீரென காணாமல் போனார்.பின் மூன்று ஆண்டுக்கு பின் பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றும் இரண்டாவது மகளான நேத்ராவதி வீட்டுக்கு திரும்பி வந்தார். அவருடனேயே தங்கியிருந்தபடி மருத்துவமனையில் சிறு வேலைகளை செய்து வந்தார்.மூன்று மாதத்துக்கு முன் மீண்டும் காணாமல் போனார்.

செப்டம்பர் 18ல் செயின்ட் ஜான் மருத்துவமனை காம்பவுண்ட் அருகில் அடையாளம் தெரியாதவர் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.இது நாகராஜப்பா உடல் அடையாளங்களுடன் ஒத்து போனதால், அது தன் தந்தைதான் என நேத்ராவதி பெற்று கொண்டார். சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தார்.காரியமும் நடத்தி முடித்து வீட்டில் அவரது போட்டோ பிரேம் போட்டு மாட்டப்பட்டு விட்டது.

இந்நிலையில், நேற்று காலை சிக்கமாலுருக்கு நாகராஜப்பா சென்றார். பஸ்சில் இறங்கியரை கிராமத்தினர் ஒரு வித பயத்துடன் பார்த்தனர்.பின் வீட்டுக்கு சென்றவுடன் குடும்பத்தினர் அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு தான் தான் இறந்தாக கூறி வேறொருவர் உடலை அடக்கம் செய்த விவரம் தெரியவந்தது.குடிப்பழக்கத்துக்கு அடிமையான நாகராஜப்பா மகளிடம் சொல்லால் அவரது வீட்டை விட்டு சென்று விட்டார்.

பல இடங்களில் சுற்றி திரிந்தார். கிடைக்கும் வேலைகளை செய்து சாப்பிட்டு வந்தார். தற்போது குடும்பத்தினர் நினைவு வரவே சொந்த ஊருக்கு வந்ததாக கூறினார். இதற்கிடையில் நாகராஜப்பா என நினைத்து அடக்கம் செய்தவர் உடல் யாருடையது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரிக்க தொடங்கி உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
02-டிச-202109:43:50 IST Report Abuse
Matt P கல்லூரி பேராசியருக்கு ஏன் உங்கள் தொலை பேசி நம்பரை கொடுக்க வேணும்? அவர் அப்படியே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாலும் அவர் நம்பருக்கு தடுப்பு போட்டிருக்கலாம். என்ன தான் நடக்க போவுது என்று பாக்கலாமா இதுக்கு மேலேயும் நடந்து விடலாம் .
Rate this:
Cancel
02-டிச-202107:59:36 IST Report Abuse
அப்புசாமி நமது ராணுவத்தினர் குடும்பங்கள் இப்பிடித்தான். கல்யாணம் பண்ணிக்கிட்டு காஷ்மீர் பக்கம் போயிருவாங்க. எப்பவாவது 10 நாள் வந்து ஒண்ணு ரெண்டு குழந்தைகளை குடுத்துட்டு திரும்ப போயிருவாங்க. அந்தப் பெண் பாவம்.. வாழ்க்கையே இல்லாம.. இந்த மாதிரி பட்டாளத்தானுக்கு ஏன் கல்யாணம்? அப்பிடிப் போறவன், போற இடத்தில் ஒண்ணும் பண்ணாம இருப்பானா? கழுத்தை அறுத்து கொலை செய்தவன் உடனடியாக தூக்கிலிடப்பட வேண்டும். இவனெல்லாம் வயசுக்காலத்தில் ஒண்ணுமே இல்லாம இருந்தானா? மகனுக்கு துரோகமாம். பொண்டாட்டியோடு வெச்சு வாழாதவன் அவந்தான் துரோகி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X