அனைத்து மொழிகளிலும் தேர்வுகள்: பார்லி.,யில் கனிமொழி வலியுறுத்தல்

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
புதுடில்லி: ''மத்திய அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளையும், ஆங்கிலம், ஹிந்தி என இரு மொழிகளில் மட்டுமல்லாது, அரசியலமைப்பு சட்டத்தின் 8 வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும்,'' என்று கனிமொழி கூறினார்.நேற்று லோக்சபாவில், தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, பேசியதாவது: சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதும் மாணவர்கள், தங்களது முதற்கட்ட
DMK, Kanimozhi Karunanidhi, Kanimozhi

புதுடில்லி: ''மத்திய அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளையும், ஆங்கிலம், ஹிந்தி என இரு மொழிகளில் மட்டுமல்லாது, அரசியலமைப்பு சட்டத்தின் 8 வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும்,'' என்று கனிமொழி கூறினார்.

நேற்று லோக்சபாவில், தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, பேசியதாவது: சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதும் மாணவர்கள், தங்களது முதற்கட்ட தேர்வுகளின்போது, பிரதான தேர்வைப் போல, தங்களது விருப்ப மொழியின் கீழ் எழுத முடியாத நிலை உள்ளது.குறிப்பாக, ஹிந்தி தெரியாத அல்லது பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, இது பெரும் சவாலாக உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளுக்கான பிரதிநிதித்துவம் என்பது மிகவும் முக்கியம்.


latest tamil news


ஹிந்தியைத் தாய்மொழியாக கொண்டவர்கள் 26 சதவீதம் மட்டுமே. ஆனால், தேர்வு முடிவுகளில் இவர்களில், 59 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவதை காண முடிகிறது. மத்திய பணியாளர் ஆணையம், ரயில்வே தேர்வுகள், வங்கித் தேர்வுகள் என அனைத்துமே ஹிந்தியில் தான் உள்ளன.

இது, ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. எனவே, சிவில் சர்வீஸ் தேர்வு உட்பட மத்திய அரசின் அனைத்து போட்டித் தேர்வுகளையும், அரசியலமைப்பு சட்டத்தின் 8 வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளிலுமே நடத்தவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர், பேசினார்.

வேலூர் தொகுதி எம்.பி., கதிர் ஆனந்த் பேசுகையில்,''வேலூர் நகரில், வெளியூர் பயணியர் தங்கும் விடுதியும், காட்பாடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு கட்டிடம் கட்டவும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கேட்டுக் கொண்டார்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
02-டிச-202118:31:19 IST Report Abuse
Bhaskaran Tamilil thervu vanthaalum enga aalunga appadiye ellaa rum thervaayidaporaanaa
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
02-டிச-202117:52:14 IST Report Abuse
RajanRajan நவோதயா பள்ளி இங்கே திறக்க வேண்டும்னு ஏன் கனி முன் மொழிய மாட்டேங்குறாராம். குடும்ப தொழில் பாதிச்சுருமோன்னு ...ஹிந்தி இங்கே உங்களை தவிர யாருமே படிக்க கூடாதா என்ன..தமிழர்களும் ஹிந்தி படித்து சிவில் தேர்வு பெறுவர். இனி இப்படி ஆத்த முடியாம போவும்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-டிச-202117:40:15 IST Report Abuse
J.V. Iyer முதலில் தமிழ்நாட்டில் அப்படியொரு சட்டம் கொண்டுவாருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X