சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பூச்சி விரட்டும் மருத்துவ உடைகள்!

Added : டிச 02, 2021
Share
Advertisement
இரவில் உறங்கும் போது கொசுக்கடி உட்பட பல பூச்சிக்கடிகளிலிருந்து தப்பிக்க ஒரு புதிய துணி வகையை 'வி டிரிப்டர்ஸ்' என்ற உடை தயாரிப்பாளர்கள் உருவாக்கியுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த வி டிரிப்டர்சின் நிறுவனர் நாடியா சால்மன், தெற்காசிய நாடுகளில் பயணித்த போது கொசுக்கடி, பூச்சிக்கடியால் மிகவும் அவதியடைந்தார். இதற்கென விற்கப்படும் பூச்சி விரட்டிகள் ஒவ்வாமையை தருபவையாக
 பூச்சி விரட்டும் மருத்துவ உடைகள்!

இரவில் உறங்கும் போது கொசுக்கடி உட்பட பல பூச்சிக்கடிகளிலிருந்து தப்பிக்க ஒரு புதிய துணி வகையை 'வி டிரிப்டர்ஸ்' என்ற உடை தயாரிப்பாளர்கள் உருவாக்கியுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த வி டிரிப்டர்சின் நிறுவனர் நாடியா சால்மன், தெற்காசிய நாடுகளில் பயணித்த போது கொசுக்கடி, பூச்சிக்கடியால் மிகவும் அவதியடைந்தார். இதற்கென விற்கப்படும் பூச்சி விரட்டிகள் ஒவ்வாமையை தருபவையாக இருந்தன.

அப்போது தான், தெற்காசிய பகுதியில் மூங்கில் இழைகளால் துணி நெய்யும் கலையை கண்டறிந்தார். இயற்கையிலேயே மூங்கில் இழை உடைக்கு கிருமி நாசினி தன்மை உண்டு. தவிர வெப்பத்தை தடுக்கும் திறனும் உண்டு. எனவே இந்த இழையில் கொசு விரட்டி மற்றும் பூச்சி விரட்டிகளை தோய்த்து தைத்தால், அது மிகச் சிறந்த இரவு உடையாக இருக்கும் என்பதை நாடியா கண்டறிந்தார்.

பிரிட்டனுக்கு வந்ததும் அதை வைத்து உடைகளை வடிவமைத்தார். கொசு வந்து அமர முடியாதபடி உடலை மூடும் வகையில் அந்த உடை இருந்தது. படுக்கை விரிப்பு, தலையணை உறை போன்றவற்றையும் மருத்துவ குணமுள்ள மூங்கில் இழை துணியால் தயாரித்து விற்கிறது, வி டிரிப்டர்ஸ். இயற்கையான மூங்கில், இனிய துாக்கத்திற்கும் வழிவகுக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X