சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

அணையில் மிதக்கும் சூரிய மின் பண்ணை!

Added : டிச 02, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தாய்லாந்து விரைவில் சூரிய ஒளி மின்சார தயாரிப்பில் சாதனை படைக்கப்போகிறது. அங்குள்ள சிரிந்தோர்ன் அணைக்கட்டின் நீர் பரப்பின் மீது ஒரு மிதக்கும் சூரிய மின் பலகை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, 1.45 லட்சம் சூரிய ஒளித் தகடுகள், அந்த நீர்த் தேக்கத்தின் மீது மிதக்கும் படி வைக்கப்பட்டுள்ளன. அவை சூரிய ஆற்றலை சேமித்து, 45 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி
 அணையில் மிதக்கும் சூரிய மின் பண்ணை!

தாய்லாந்து விரைவில் சூரிய ஒளி மின்சார தயாரிப்பில் சாதனை படைக்கப்போகிறது. அங்குள்ள சிரிந்தோர்ன் அணைக்கட்டின் நீர் பரப்பின் மீது ஒரு மிதக்கும் சூரிய மின் பலகை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, 1.45 லட்சம் சூரிய ஒளித் தகடுகள், அந்த நீர்த் தேக்கத்தின் மீது மிதக்கும் படி வைக்கப்பட்டுள்ளன. அவை சூரிய ஆற்றலை சேமித்து, 45 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. நீர்த் தேக்கத்தின் மேற்பரப்பில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே சூரியப் பலகை மிதவைகளால் மூடப்பட்டுள்ளது.

எனவே, அணையின் நீர் மற்றும் அதில் வாழும் மீன் இனங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என இத்திட்டத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குளிர்ந்த நீரின் மீது மிதக்கும் சூரியப் பலகைகள், வெப்ப காலத்தில் அதிகம் சூடேறுவது தவிர்க்கப்படும். மேலும் மின் உற்பத்தி விகிதமும் 10 முதல் 15 சதவீதம் அதிகரிக்கும் என இத்திட்டத்தின் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு பக்கவிளைவாக, சிரிந்தோர்ன் அணைக்கட்டின் நீர் இருப்பு ஆவியாவது ஆண்டுக்கு 4.6 லட்சம் கனமீட்டர் அளவுக்கு தடுக்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, தாய்லாந்தின் காற்றில் ஆண்டுக்கு 24 ஆயிரம் டன்கள் பசுமைக்குடில் வாயுக்கள் கலப்பது தடுக்கப்படும் என தாய்லாந்து மின் உற்பத்தி ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-டிச-202121:38:43 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சிங்கப்பூரில் சில ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள தொழில்நுட்பம். தெர்மாகோல் விஞ்ஞானிக்கு தான் வாய்ப்பு கிட்டவில்லை.
Rate this:
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
02-டிச-202119:30:04 IST Report Abuse
sridhar அன்னே இதைத்தான் நம்ப செல்லூர் அண்ணாச்சி பண்ணாரு அவரை போட்டு கலச்சிபுடிங்க அதனாலதான் அவரு குழம்பிட்டாரு இல்லேன்னா சரியாதான் பண்ணியிருப்பாரு
Rate this:
Cancel
amicos - Bali,இந்தோனேசியா
02-டிச-202115:35:23 IST Report Abuse
amicos எல்லாம் நம்ம முன்னாள் அமைச்சரின் யோசனையை காப்பி அடித்து உள்ளார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X