பொது செய்தி

இந்தியா

ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பதை அறிவது எப்படி?

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
இந்தியாவில் இதுவரை புதிய வகை கோவிட் வைரஸான ஒமைக்ரானின் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருப்பினும் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்பதை பார்ப்போம். ஒமைக்ரான் வைரஸ் முந்தைய வைரஸ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. உடலின் உயிரணுக்களுடன் பிணைப்பை ஏற்படுத்தும் கோவிட்டின் கூம்பு புரதத்தில் 30 மாற்றங்களை கண்டுள்ளது. அது அதிக


இந்தியாவில் இதுவரை புதிய வகை கோவிட் வைரஸான ஒமைக்ரானின் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருப்பினும் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்பதை பார்ப்போம்.



latest tamil news



ஒமைக்ரான் வைரஸ் முந்தைய வைரஸ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. உடலின் உயிரணுக்களுடன் பிணைப்பை ஏற்படுத்தும் கோவிட்டின் கூம்பு புரதத்தில் 30 மாற்றங்களை கண்டுள்ளது. அது அதிக பரவலுக்கும், தடுப்பூசியின் செயல்திறனை குறைக்கவும் வழி வகுக்கலாம் என அஞ்சுகின்றனர்.

இருப்பினும் இது பற்றி முழுமையாக தெரியவர சில வாரங்கள் பிடிக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஆர்.டி., பி.சி.ஆர்., பரிசோதனை மூலம் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருக்கிறதா அல்லது பொதுவான கோவிட் பாதிப்பு உள்ளதா என்பது கண்டறிய முடியும்.


latest tamil news


முழுமையான ஆர்.டி., பி.சி.ஆர்., கோவிட் பரிசோதனை அறிக்கையில் என், எஸ், இ மற்றும் ஓஆர்இ., ஜீன்கள் அடங்கியிருக்கும். ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவரின் பரிசோதனையில் எஸ் ஜீன் விடுபட்டிருக்கும். இதனைக் கொண்டு அவருக்கு பொதுவான கோவிட் ஒமைக்ரான் தொற்று உள்ளதா என்பதை அறிகிறார்கள்.


அறிகுறிகள்

முந்தைய கோவிட் வைரஸ் வகைகள் ஏற்படுத்திய பெரும்பாலான அறிகுறிகளையே இவையும் காட்டுகின்றன. மிகுந்த சோர்வு, காய்ச்சல், உடல் வலி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு, தொண்டை எரிச்சல் ஆகியவை ஏற்படும்.

இந்த வகையில் ஒரு வித்தியாசம் என்னவெனில் சுவை அல்லது வாசனை இழப்பு இருக்காது. ஆக்ஸிஜன் அளவும் குறையாது. மருத்துவமனையில் சேரும் நிலை வராது என்கின்றனர். தடுப்பூசி போட்டு, முகக்கவசம் உபயோகித்தால் அச்சம் தேவையில்லை.



Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
02-டிச-202119:48:59 IST Report Abuse
Sivagiri இப்ப இதுவா பிரச்சினை ? ? . . . தமிழ் புத்தாண்டை எப்படி கொண்டாடுறதுங்குறதுதானே - இப்ப மெயின் பிரச்சினை . . . கொரோனா , ஓமிக்றான் , பெட்ரோல் விலை , மழை வெள்ளம் , நிவாரணம் , வேட்டி சேலை , பொங்கல் இனாம் , தக்காளி விலை , இதெல்லாம் ஓரமா போங்கடா . . . தமிழ் புத்தாண்டை எப்படி கொண்டாடுறம்னு மட்டும் பாருங்க . . .
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-டிச-202116:39:02 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மருந்தீஸ்வரர் கோவில் தீர்த்தம் குடிச்சிட்டு உங்க பேருக்கு அர்ச்சனை பண்ணிட்டு, அப்புறம் முக்கியமா பெருசா தட்சிணை கவனிச்சா எந்த கோவிட் தொற்றும் அண்டாது.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
02-டிச-202114:56:45 IST Report Abuse
 N.Purushothaman ரொம்ப சிம்பிள் ....திருமா மாதிரி சேர் மேல நடந்து போனா நோய்த்தொற்று வராது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X