நாற்காலி மீது நீங்கள் நிற்க, தொண்டர்கள் அதை இழுக்க, 'அழகாக' தண்ணீரை கடந்து சென்றீர்களே!

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: பார்லிமென்டில் கால்நடை தீவனங்கள் பற்றாக்குறை தொடர்பான என் கேள்விக்கு, மத்திய கால்நடைத் துறை அமைச்சர் அளித்துள்ள பதிலில், 'நாட்டில் கால்நடை தீவனப் பற்றாக்குறை நிலவுவது உண்மை தான். அதை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன' என தெரிவித்துள்ளார்.தண்ணீர் படாமல் தண்ணீரில் நடந்து செல்வது எப்படி என,
திருமாவளவன், முத்தரசன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: பார்லிமென்டில் கால்நடை தீவனங்கள் பற்றாக்குறை தொடர்பான என் கேள்விக்கு, மத்திய கால்நடைத் துறை அமைச்சர் அளித்துள்ள பதிலில், 'நாட்டில் கால்நடை தீவனப் பற்றாக்குறை நிலவுவது உண்மை தான். அதை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன' என தெரிவித்துள்ளார்.


தண்ணீர் படாமல் தண்ணீரில் நடந்து செல்வது எப்படி என, பார்லி.,யில் கேள்வி கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனெனில், நாற்காலி மீது நீங்கள் நிற்க, தொண்டர்கள் அதை இழுக்க, 'அழகாக' தண்ணீரை கடந்து சென்றீர்களே!இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி
: நெல் கொள்முதல் செய்வது போல காய்கறியையும் கொள்முதல் செய்து, தமிழக அரசு நேரடி விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு பாதிப்பு வராது.


குறைந்தபட்சம், அடிக்கடி விலை உயரும் தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய் போன்ற அத்தியாவசிய காய்கறிகளுக்காவது விலை நிர்ணயம் செய்து, அரசு கொள்முதல் செய்தால், விலை மாறுபாட்டால் மக்களுக்கும் பாதிப்பு வராது!அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழக மாநில தலைவர் தியாகராஜன் பேட்டி: மண் பாண்ட தொழிலாளர்கள் மண்பாண்டங்கள் செய்வதற்கு களிமண் எடுக்கலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மணல் எடுப்பதற்கு அனுமதி அளிக்காமல் பல இடர்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.


சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி கொடுக்க மறுப்பது போல உள்ளது நீங்கள் சொல்லும் பிரச்னை; கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டும்!த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: தண்ணீர் சூழ்ந்துள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை, மேடான பகுதிகளுக்கு அரசு பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும். மழைநீர் வடியும் காலம் வரை, அவர்களை அங்கேயே தங்க வைத்து உணவளிக்க வேண்டும்.


latest tamil news
பெயருக்கு ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு, உணவு வழங்கப்படுகிறது; அது தீர்வல்ல. தண்ணீர் தேங்காத அளவுக்கு நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை அவசியம்!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: சென்னை விரைவில், அ.தி.மு.க., கோட்டையாக மாறும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மாநில தேர்தல் ஆணையம், தி.மு.க., அரசின் கைப்பாவையாக இல்லாமல், சுதந்திரமாக செயல்பட வேண்டும்.


உங்களின் இரண்டு கோரிக்கைகளும் நிறைவேறுவது கடினம் தான். கோட்டையாக மாறுவது இப்போதைக்கு நடக்கக் கூடிய காரியமில்லை. அதுபோல, மாநில தேர்தல் ஆணையமும், தன் போக்கை மாற்றிக் கொள்ளாது!இந்திய கம்யூனிஸ்ட் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன் பேட்டி: வெள்ள நீரை சரியாக பயன்படுத்தும் நீர் மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை தரப்பட வேண்டும்.


நீர் மேலாண்மைக்கு சரியான திட்டங்கள் ஏற்கனவே உள்ளன. அவை அமல்படுத்தப்படுவதில்லை. அதனால் தான் மாநிலம் முழுக்க தண்ணீர்... தண்ணீர்!


Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
05-டிச-202116:26:43 IST Report Abuse
meenakshisundaram தாழ்த்தப்பாட்டோரின் 'சனீஸ்வர பகவான் 'நாற்காலி வாகனத்தில் மக்களுக்கு தரிசனம் தந்தார் ?
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
02-டிச-202122:09:37 IST Report Abuse
Tamilnesan அரை அடி தண்ணீரில் கால் வைக்க தயங்கும் திருமா, ஆறு கோடி மக்களுக்கு எப்படி சேவை செய்வார்? சிந்திப்பீர் சிதம்பரம் தொகுதி வாக்காளர்களே ஏமாற தயாராக பொது மக்கள் இருக்கும்வரை ஏமாற்றும் அரசியல்வியாதிகள் இருக்கத்தான் செய்வார்கள்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
02-டிச-202120:31:47 IST Report Abuse
Bhaskaran Intha kumbal saliva thirumadangalai keliseivaargal ivargal thalaivarai naarkaaliyin mel vaiththu pavani varuvaargal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X