பொது செய்தி

இந்தியா

பெண் கான்ஸ்டபிள் ஆணாக மாற ம.பி., உள்துறை அனுமதி

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
போபால்:மத்திய பிரதேசத்தில், பாலினத்தை மாற்ற பெண் கான்ஸ்டபிளுக்கு, மாநில உள்துறை அனுமதி வழங்கி உள்ளது.மத்திய பிரதேசத்தில், கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் பெண் ஒருவர், ஆணாக மாறுவதற்கு தனக்கு அனுமதி வழங்கக்கோரி, மாநில உள்துறையிடம், கடந்த 2019ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். அரசு ஆவணங்களிலும், தன் பாலினத்தை பெண்ணில் இருந்து ஆணாக மாற்ற, அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
Madhya Pradesh, Female Police Constable, Given Permission, State Government, Gender Change, பெண் கான்ஸ்டபிள், ஆண், அனுமதி

போபால்:மத்திய பிரதேசத்தில், பாலினத்தை மாற்ற பெண் கான்ஸ்டபிளுக்கு, மாநில உள்துறை அனுமதி வழங்கி உள்ளது.

மத்திய பிரதேசத்தில், கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் பெண் ஒருவர், ஆணாக மாறுவதற்கு தனக்கு அனுமதி வழங்கக்கோரி, மாநில உள்துறையிடம், கடந்த 2019ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். அரசு ஆவணங்களிலும், தன் பாலினத்தை பெண்ணில் இருந்து ஆணாக மாற்ற, அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், அவரின் கோரிக்கையை மாநில உள்துறை அமைச்சகம் ஏற்றுள்ளது.


latest tamil newsஉள்துறையின் கூடுதல் தலைமை செயலர் டாக்டர் ராஜேஷ் ரஜோரா கூறியதாவது: சிறு வயதில் இருந்தே அந்த பெண் கான்ஸ்டபிள், தன் பாலினத்தை அடையாளம் காண முடியாத பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை, உளவியலாளர்கள் உறுதிபடுத்தி உள்ளனர். அவர் ஆண் கான்ஸ்டபிளை போல அனைத்து விதமான பணிகளையும் எளிதில் செய்து முடிக்கும் திறன் உடையவர். இதன் அடிப்படையில், அவரின் கோரிக்கையை ஏற்று, அவரின் விருப்பப்படி பாலினத்தை மாற்ற, மாநில டி.ஜி.பி.,க்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
09-டிச-202104:50:44 IST Report Abuse
Watcha Mohideen திருநங்கைகளை அங்கீகரிக்கும்போது இதில் என்ன தவறு ?
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
02-டிச-202114:30:27 IST Report Abuse
sankar உ பி மற்றும் சில வடமாநிலங்களில் இப்படி பல முட்டல்தனமான காரியங்கள்ள் அவ்வப்போது நடக்கும்
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
02-டிச-202113:30:05 IST Report Abuse
A.George Alphonse போலீஸ் recruitment நேரத்தில் மெடிக்கல் டெஸ்டிங் டாக்டர்கள். கண்டுபிடிக்கவில்லையா? அல்லது அந்த கான்ஸ்டபில் பேசிக் ட்ரைனிங்கில் யாருக்குமே அந்த கான்ஸ்டப்பில் பாலினத்தில் சந்தேகம் வரவில்லையா? எல்லாமே விந்தையாக இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X