பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 1,160 யானைகள் படுகொலை

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மதுரை: இந்தியாவில் பல்வேறு காரணங்களால், கடந்த 10 ஆண்டுகளில் 1,160 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு யானைகள் திட்ட வல்லுனரும், தலைமை பொது தகவல் அலுவலருமான முத்தமிழ் அளித்துள்ள பதில்: கடந்த 2020 டிசம்பர் 31 வரை, கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் ரயில் மோதி
Elephant, Died, India, Murder, யானைகள், படுகொலை, இந்தியா

மதுரை: இந்தியாவில் பல்வேறு காரணங்களால், கடந்த 10 ஆண்டுகளில் 1,160 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு யானைகள் திட்ட வல்லுனரும், தலைமை பொது தகவல் அலுவலருமான முத்தமிழ் அளித்துள்ள பதில்: கடந்த 2020 டிசம்பர் 31 வரை, கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் ரயில் மோதி இறந்துள்ளன.


latest tamil news


அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் 62 யானைகள் இறந்துள்ளன.தமிழகத்தில் ஐந்து யானைகள் பலியாகியுள்ளன. மின்சாரம் தாக்கி 741 யானைகள் இறந்துள்ளன.இதில் அதிக பட்சமாக ஒடிசாவில் 133; தமிழகத்தில் 93 யானைகள் இறந்துள்ளன. இதே கால கட்டத்தில், விஷம் வைத்தும் யானைகள் கொல்லப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் 32 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒரு யானை கொல்லப்பட்டுள்ளது.


latest tamil news

கணக்கெடுப்பு


கடந்த 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி நாடு முழுதும் 29 ஆயிரத்து 964 யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கர்நாடகாவில் 6,049; அசாமில் 5,719; கேரளாவில் 5,706; தமிழகத்தில் 2,761 யானைகள் உள்ளன. நாடு முழுதும் யானைகளை பாதுகாக்க, 10 ஆண்டுகளில் 212.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. யானைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டியராஜா கூறுகையில், ''யானைகள் அழிந்தால் காடுகள் அழியும். காடுகள் அழிந்தால் விலங்கினம், மனித இனம் அழிவுப் பாதையை நோக்கி செல்லும். எனவே, மத்திய - மாநில அரசுகள் துரிதமாக செயல்பட்டு யானைகள் அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
02-டிச-202113:54:14 IST Report Abuse
pattikkaattaan இவ்வளவு யானைகள் கொல்லப்பட்டுள்ளன ... கேரளாவில் ஒரு யானை இறந்தபோது பொங்கிய நாம், மற்ற சமயங்களில் பேசாமல் இருக்கிறோம்? சென்ற வாரம் கோவையில் மூன்று யானைகள் கொல்லப்பட்டுள்ளன.. விலங்குகள் பாதுகாக்கப்படவேண்டும் ..
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
02-டிச-202113:13:10 IST Report Abuse
PRAKASH.P Lord Ganesha ... this world quickly before they destroy all.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
02-டிச-202110:54:54 IST Report Abuse
சீனி தொழில் நுட்பம் தான் தீர்வு, வனத்துறை யானை செல்லும் பாதைகளை கூகுள் மேப் மூலம் வரைந்து வைத்துக் கொள்ள வேண்டும். புதிய சாலை, ரயில்வே பாதைகள் அமைக்கும் போது, யானைகள் போக்குவரத்துக்கு பாலங்கள், சுரங்கங்கள் மூலம் சுதந்திரமாக நடமாட வழி ஏற்ப்படுத்தவேண்டும். அந்த பாலத்திற்க்கு கீழ், மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் ஏற்படுத்தினால் அவைகளுக்கும் நீர் கிடைக்கும், அதே போல், அவ்வப்போது வனத்துறையும் தண்ணீர் நிரப்பலாம். மின்சாரம் தாக்கி இறந்தால், உடனே மின் துறைக்கு நோட்டீஸ் கொடுத்து, ஒரு யானை பலிக்கு 50-100 க்கோடி அபராதம் விதிக்கவேண்டும், அப்பதான் சரி பண்ணுவார்கள். யானை நடமாடும் பகுதில் ஏன் சாதாரண கம்பிகள் பயன்படுத்தவேண்டும், பாதுகாப்பான கேபிள்கள் பயன் படுத்தலாம். ஒவ்வொரு யானை இறப்பையும், உடனே தேசிய அளவில் பதிவு செய்து அரசு உடனடியாக ஒரு ஒரு குழுவை அமைத்து சோதனை செய்யவேண்டும். யானைகளை இழந்தால், விரைவில் காடுகளை இழக்கவேண்டியிருக்கும். அடுத்து விவாசாயம் பாதிக்கப்படும். அதிக யானைகளை பாதுகாப்பாக பராமரிக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கு, ஒவ்வொருவருடமும் பத்மபூஷன் போன்ற விருதுகளை கொடுக்கலாம், இல்லன்னா சம்பளம் உயர்த்தலாம். மழை பெய்து நாடு நல்ல நிலையில் இருக்க காடுகள் நல்ல நிலையில் இருக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X