தேசிய கீதத்தை அவமதித்தாரா மம்தா?; கொந்தளிக்கும் பா.ஜ.,

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
மும்பை: மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது தேசிய கீதத்தை பாடிய மேற்குவங்க முதல்வர் மம்தா, அதனை அமர்ந்துக்கொண்டு பாடியதுடன் முழுமையாக பாடாமல் அவமதித்ததாக பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முயற்சித்து
Mamata, Insult, National Anthem, BJP, Condemn, மம்தா, தேசிய கீதம், அவமதிப்பு, பாஜக, பாஜ, கண்டனம்

மும்பை: மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது தேசிய கீதத்தை பாடிய மேற்குவங்க முதல்வர் மம்தா, அதனை அமர்ந்துக்கொண்டு பாடியதுடன் முழுமையாக பாடாமல் அவமதித்ததாக பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறார். இதனால், பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு 3 நாள் பயணமாக சென்ற மம்தா, தேசியவாத காங்., தலைவர் சரத்பவாரை நேற்று (டிச.,01) சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். முடிவில், அவர் தேசிய கீதத்தை பாடினார்.


latest tamil news




முதலில் கீழே அமர்ந்து தேசிய கீதம் பாடிய மம்தா, பாதியில் எழுந்து நின்றதுடன், முழுமையாக பாடாமல் அவசரமாக முடித்து விடுகிறார். தேசிய கீதத்தை அவமதித்ததாக மம்தாவை பா.ஜ.,வினர் கடுமையாக சாடி வருகின்றனர். மேற்குவங்க பா.ஜ., தலைவர் சுகந்தா மஜூம்தார் கூறுகையில், 'மேற்குவங்க முதல்வர் மம்தா, அரசியல் சாசனப் பதவியில் அமர்ந்துக்கொண்டு, மும்பையில் நடந்த கூட்டத்தில் தேசிய கீதத்தை அவமதிக்கிறார். அவருக்கு சரியான தேசிய கீத நெறிமுறை தெரியாதா அல்லது தெரிந்தே அவமதிக்கிறாரா?,' எனக் கூறியுள்ளார். மம்தா தேசிய கீதத்தை அவமதித்ததாக பலரும் கண்டன கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
02-டிச-202121:19:58 IST Report Abuse
Priyan Vadanad நாட்டுப்பற்று இதயத்துள் இருக்கவேண்டும். வெறும் வாய் வார்த்தைகளில் நாட்டுப்பற்றை எதிர்பார்க்கிற கூட்டம் உண்மையான நாட்டுப்பற்றுள்ள கூட்டம் அல்ல. நாட்டை சுரண்டும் கூட்டம்.
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
02-டிச-202119:46:07 IST Report Abuse
அறவோன் தேசிய கீதத்திற்கும் பாரதீயதிற்கும் யாதொரு தொடர்பு கிஞ்சித்தும் கிடையாது
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
02-டிச-202117:22:42 IST Report Abuse
DVRR அதாவது தேசிய கீதத்தில் மராட்டா என்று வந்து விட்டதாம் அதை சொல்லி மகாராஷ்டிரா வாழ்க என்று சொல்லவேண்டுமாம் என்று இதை பாடியிருப்பது போல காட்டியிருக்கின்றார் 1)முதல் வரியில் வரும் கண என்ன சொன்னார் ஜன மன பண அதிநாயக ஜெயஹே இவரெல்லாம் இந்தியாவின் மாநிலத்தின் முதலமைச்சர் இதைவிட கேவலமாக ஒருவரால் தெளிவற்ற முறையில் கூட கூற முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X