அரசியல் செய்தி

தமிழ்நாடு

நேற்று விதிமுறை மாற்றம்; இன்று ஒருங்கிணைப்பாளர் தேர்தல் அறிவிப்பு; ஓபிஎஸ், இபிஎஸ் படுவேகம்!

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை: நேற்று (டிச.,1) அ.தி.மு.க.,வின் தலைமை பதவிகளான ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என்று விதிமுறை கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த சூடு ஆறுவதற்குள் டிச.,7 ம் தேதி கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் நடக்கும் என இன்று (டிச.,2) அறிவிக்கப்பட்டது
admk, அதிமுக, ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர், தேர்தல்

சென்னை: நேற்று (டிச.,1) அ.தி.மு.க.,வின் தலைமை பதவிகளான ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என்று விதிமுறை கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த சூடு ஆறுவதற்குள் டிச.,7 ம் தேதி கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் நடக்கும் என இன்று (டிச.,2) அறிவிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போதைய ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான பழனிசாமியும் காட்டும் வேகம், கட்சியினரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

இது தொடர்பாக அ.தி.மு.க., தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கட்சி அமைப்புகளின் பொதுத்தேர்தல் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நடத்திட வேண்டும் என்ற விதிமுறைக்கு ஏற்ப ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் டிச., 7 காலை 10:00 மாலை 5:00 மணி வரை நடக்கும்.


latest tamil news


இதற்காக வேட்பு மனு தாக்கல் டிச.,3ல் துவங்கி டிச.,4 பிற்பகல் 3 மணிக்கு நிறைவு பெறும்.டிச.,5 காலை, 11:25 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை நடக்கும். டிச.,6ல் வேட்புமனுக்களை திரும்ப பெற்று கொள்ளலாம் எனவும், டிச.,8 ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




இரண்டு கட்டங்களாக உட்கட்சி தேர்தல்


அதேபோல், கிளைக்கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்ட கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது.

முதல் கட்டமாக டிச.,13,14ல் கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கரூர், நீலகிரி, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், விழுப்புரம், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, காஞ்சிபுரம், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தி, திருவள்ளூர் மேற்கு, செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு மாவட்டங்களிலும்,

2வது கட்டமாக டிச.,22 மற்றும் 23 தேதிகளில், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, சிவகங்கை , ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, திருவாரூர், புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, தஞ்சாவூர் வடக்கு , தஞ்சாவூர் தெற்கு, திருச்சி புறநகர் தெற்கு, திருச்சி மாநகர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு , திருப்பூர் புறநகர் மேற்கு, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர் மாநகர், திருப்பத்தூர், வேலூர் புறநகர், கடலூர் தெற்கு, கடலூர் வடக்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, ராணிப்பேட்டை, வடசென்னை வடக்கு(கிழக்கு) வடசென்னை வடக்கு(மேற்கு) வடசென்னை தெற்கு(கிழக்கு) வடசென்னை தெற்கு(மேற்கு) சென்னை புறநகர், தென்சென்னை வடக்கு(கிழக்கு) தென்சென்னை வடக்கு(மேற்கு), திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, தென்சென்னை தெற்கு(கிழக்கு) தென்சென்னை தெற்கு(மேற்கு) மாவட்டங்களில் நடக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


சசிகலா இணைவதை விரும்பவில்லை


அதிமுகவின் பொன்மையன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் இரட்டை தலைமையே சிறந்தது. கண்ணும் இமையும் போல், இரட்டை தலைமை சிறப்பாக உள்ளது. நகமும், சதையும் தனித்தனியாக செயல்பட வேண்டும் என யாரும் விரும்ப மாட்டார்கள். சசிகலா அ.தி.மு.க.,வில் இணைவதை தொண்டர்கள் யாரும் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
03-டிச-202103:41:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எத்தனை தலைமை இருந்தாலும் அத்தனையும் பாஜாகாவின் அடிமை.. ஆடீம்காவை ஆட்டி இலைகளை உதிர்த்து பாஜாக்கா மேயுது. வேடிக்கை பார்க்கும் பச்சை குத்திக்கிட்ட ராராக்கள்.
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
02-டிச-202122:45:03 IST Report Abuse
DARMHAR காலத்திற்கேற்றவாறு சமைய சந்தர்ப்பங்களை பொறுத்து விதிமுறைகள் மாற்றப்படும் என்று மற்றொரு விதிமுறை வந்தாலும் அதில் வியப்பொன்றுமில்லை
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
02-டிச-202122:30:48 IST Report Abuse
Barakat Ali அதிமுக தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிரா சசிகலா நுழைந்து கட்சியை கபளீகரம் செய்வார் என்று டீம்கா அடிமைகளான நாங்க எதிர்பார்த்தோம் நாக்கை தொங்க போட்டுக்கிட்டு காத்திருந்தோம் நடக்காது போலிருக்கே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X