பெரியவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய, குழந்தைகள் மட்டும் பள்ளிக்கு செல்வதா?: உச்சநீதிமன்றம் கேள்வி

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், பெரியவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய, குழந்தைகள் மட்டும் பள்ளிக்கு செல்வதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.டில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. தொடர்ந்து 4 வாரங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை, இன்றும் (டிச.,02)
Adults WFH, Children In School, SC, Supreme Court, Pollution, Delhi, டில்லி, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி, பெரியவர்கள், வீட்டிலிருந்து வேலை, குழந்தைகள், பள்ளிகள், டில்லி அரசு

புதுடில்லி: டில்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், பெரியவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய, குழந்தைகள் மட்டும் பள்ளிக்கு செல்வதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. தொடர்ந்து 4 வாரங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை, இன்றும் (டிச.,02) தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது: டில்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக அரசு கூறினாலும், கடந்த சில வாரங்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை எதுவும் நடக்கவில்லை, மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, நேரம் மட்டுமே வீணாகிறது. டில்லி அரசு இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


latest tamil news


காற்று மாசு அதிகரித்துவரும் நிலையில், பள்ளிகளை திறந்திருப்பது ஏன்? 3, 4 வயது குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால், பெரியவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பதிலளித்த டில்லி அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, 'பள்ளிகளை திறக்கவில்லை எனில் குழந்தைகள் கற்பித்தலை மறக்க நேரிடும் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். விருப்பப்பட்டால் ஆன்லைன் வாயிலாகவும் பாடங்களை கற்கலாம் எனக் கூறியே பள்ளிகளை திறந்தோம்,' எனக் கூறினார்.


latest tamil news


அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி ரமணா, 'இதை விருப்பத்திற்கு விட்டுவிட்டீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் யார் வீட்டில் உட்காருவார்கள்? எங்களுக்கும் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர். தொற்றுநோய் பரவல் காலத்தின் துவக்கத்திலிருந்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் எங்களுக்குத் தெரியும். உங்களுக்கு 24 மணிநேரம் அவகாசம் தருகிறோம். அதற்குள் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நாளை கடுமையான நடவடிக்கை எடுப்போம்,' எனக் காட்டமாக கூறினார்.


பள்ளிகள் மூடல்

உச்சநீதிமன்றம் கேள்வியை தொடர்ந்து, டில்லியில் நாளை(டிச.,3) முதல் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
03-டிச-202104:24:44 IST Report Abuse
மலரின் மகள் இரயில் போக்குவரத்தை அதிகரிக்கவேண்டும். இருந்த ஒரு பெரிய இரயில் திட்டத்தை கிடப்பில் போட்டாயிற்று அந்த தனியார் நிறுவனம். பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தவேண்டும். தொழிற்சாலைகள் நகருக்கு வெளியில் கொண்டுசெல்லவேண்டும். கட்டுமானங்களை சகட்டுமேனிக்கு அனுமதிக்கக்கூடாது.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-டிச-202119:46:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சிம்பிளா சொன்னா, “கேணத்தனமான கேள்வி”
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-டிச-202117:38:49 IST Report Abuse
J.V. Iyer தான் என்ன செய்யவேண்டுமோ அதைச்செய்யாமல்.... இப்படி இந்தியாவில்தான் நடக்கும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X