பொது செய்தி

இந்தியா

சிபிஎஸ்இ தேர்வில் குஜராத் கலவரம் பற்றி கேள்வி: கிளம்பியது சர்ச்சை

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பிற்கு முதல் பருவ தேர்வில் குஜராத் கலவரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தவறை ஒப்பு கொண்டுள்ள சிபிஎஸ்இ அமைப்பும் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.கடந்த 2002ம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிக்கு தீவைக்கப்பட்டதில் 59 ஹிந்து யாத்ரீகர்கள் பேர் உயிரிழந்தனர். இதன் பின்பு பல
சிபிஎஸ்இ, தேர்வு, குஜராத் கலவரம், கேள்வி,  சர்ச்சை

புதுடில்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பிற்கு முதல் பருவ தேர்வில் குஜராத் கலவரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தவறை ஒப்பு கொண்டுள்ள சிபிஎஸ்இ அமைப்பும் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிக்கு தீவைக்கப்பட்டதில் 59 ஹிந்து யாத்ரீகர்கள் பேர் உயிரிழந்தனர். இதன் பின்பு பல இடங்களில் ஏற்பட்ட கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முதல் பருவ சோஷியாலஜி பாட தேர்வில், 2002 ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் நடந்த போது எந்த கட்சி ஆட்சியில் இருந்தது என கேள்வி கேட்டு அதற்கு பதிலாக 4 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. அதில், பா.ஜ., காங்கிரஸ், ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி என கொடுக்கப்பட்டு, அதில் ஒன்றை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


latest tamil news


இது தொடர்பாக சி.பி.எஸ்.இ., அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிளஸ் 2 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி முறையற்றது. கேள்வித்தாள் அமைப்பதற்காக வந்த ஆசிரியர்கள், சி.பி.எஸ்.இ., விதிமுறைகளை மீறியுள்ளனர். தவறு நடந்துள்ளதை சி.பி.எஸ்.இ., ஒப்பு கொள்கிறது. சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manitha neyam - tamilnadu,இந்தியா
03-டிச-202109:19:32 IST Report Abuse
manitha neyam கேள்வியே தவறு , குஜராத் கலவரத்திற்கு யார் காரணம் அந்த கலவரத்தில் எத்தனை முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் அப்போது ஆட்சி செய்த புண்ணியவான் யார் என்றல்லவா கேள்வி கேட்டிருக்க வேண்டும் ,
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
03-டிச-202104:54:37 IST Report Abuse
J.V. Iyer இப்படித்தான் எதிர் கட்சிகள் சந்தோஷப்படவேண்டும். மிகவும் கீழ்த்தரமாக உள்ளதே??
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
02-டிச-202118:01:50 IST Report Abuse
Kumar குஜராத் கலவரத்திற்கு யார் காரணம் என்று கேட்டு இருக்கலாம். இப்ப உடனே வந்து கத்த ஆர‌ம்பித்து இருப்பார்கள் மூர்க்கர்கள். அடி அப்படி. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X