பொது செய்தி

தமிழ்நாடு

திரும்பவும் முதல்ல இருந்தா?: 3 மாவட்டங்களில் டிச.,4 முதல் கனமழைக்கு வாய்ப்பு

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: ‛‛மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் டிச., 4ம் தேதி இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:இன்று (டிச.,2ம் தேதி): தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான
Chance Heavy Rain, December 4, 3 Districts, Meteorological, Center, Announcement, தமிழகம், டிசம்பர் 4, 3 மாவட்டங்கள், கனமழை, வானிலை ஆய்வு மையம்,

சென்னை: ‛‛மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் டிச., 4ம் தேதி இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:



latest tamil news


இன்று (டிச.,2ம் தேதி): தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை 3ம் தேதி: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.


latest tamil news


Advertisement


மத்திய வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவ உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவரும் 4ம் தேதி: மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

வரும் 5ம் தேதி: நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.


latest tamil news



சென்னையை பொறுத்தவரை:



அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:



ஈரோடு 6 செ.மீ., ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்) 5 செ.மீ., ஆவுடையார்கோவில் (புதுக்கோட்டை), வீரபாண்டி (தேனி) தலா 4 செ.மீ., சோத்துப்பாறை (தேனி), பார்லியார் (நீலகிரி) தலா 3 செ.மீ., ஆண்டிப்பட்டி (மதுரை), பேராவூரணி (தஞ்சாவூர்), மணல்மேல்குடி, விராலிமலை, குடுமியான்மலை (புதுக்கோட்டை), குன்னுார் பிடோ (நீலகிரி), போடிநாயக்கனுார் (தேனி), காரைக்குடி (சிவகங்கை), சூரங்குடி, நாகப்பட்டினம் (துாத்துக்குடி) தலா 2 செ.மீ.,


latest tamil news




மீனவர்களுக்கான எச்சரிக்கை:




வங்கக்கடல் பகுதிகள்:



தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மத்தி வங்கக்கடல் பகுதிக்கு நகரக்கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கரையை வரும் 4ம் தேதி காலை நெருங்கக்கூடும்.


latest tamil news


இன்று 2ம் தேதி: தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை 3ம் தேதி: மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வரும் 4ம் தேதி: மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
02-டிச-202119:28:36 IST Report Abuse
M  Ramachandran ஒரு வழியாக திராடர்களுடையா நாட்டை பதம் பார்க்கிறது. தெய்வ நம்பிக்கையய் கேலி செய்வதற்கு தகுந்த பாடம் தெய்வம் நின்று கொல்லும்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
02-டிச-202115:28:20 IST Report Abuse
raja இந்த மழையால மக்கள் அவதிப்பட போறத மடை மாத்த எந்த தேதியை மாத்த போறாரோ விடியலு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X