கோவிட் தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம் செய்த கிறிஸ்தவ போதகர்: கோவிட்டிற்கு பலியானார்

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் கோவிட் தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம் செய்த கிறிஸ்தவ போதகர், கோவிட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் மார்கஸ் லாம்ப். இவர், மதத்தை பரப்புவதற்காகவே தனியாக டிவி சேனல் நடத்தி வந்தார். அவர் தனது நிகழ்ச்சிகளில், கோவிட் தடுப்பூசிக்கு எதிராகவே பேசி வந்தார். கோவிட் தடுப்பூசி
கோவிட், தடுப்பூசி, கிறிஸ்தவ பிரசாரகர்,  கோவிட், பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கோவிட் தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம் செய்த கிறிஸ்தவ போதகர், கோவிட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் மார்கஸ் லாம்ப். இவர், மதத்தை பரப்புவதற்காகவே தனியாக டிவி சேனல் நடத்தி வந்தார். அவர் தனது நிகழ்ச்சிகளில், கோவிட் தடுப்பூசிக்கு எதிராகவே பேசி வந்தார். கோவிட் தடுப்பூசி உண்மையில் தடுப்பூசியே அல்ல; அது சோதனை முயற்சி; அது அபாயகரமானது என மிரட்டினார்.

அதனை அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மறுத்து வந்தது. தடுப்பூசி பாதுகாப்பானது; அதனை போட்டவர்கள் உயிரிழப்பது அரிதானது. தடுப்பூசி போடாதவர்கள் உயிரிழப்பு என்பது 11 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது என விளக்கமளித்தது.


latest tamil news


இந்நிலையில், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த மார்கஸ் லாம்ப், ரத்தத்தில் சர்க்களை அளவு அதிகரித்ததாலும், ஆக்சிஜன் அளவு குறைந்ததாலும் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கோவிட் உறுதியானது. அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மார்கஸ் லாம்ப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அவரது மனைவி ஜோனி லாம்ப் அறிவித்தார்.

மார்கஸ் லாம்ப் கோவிட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, கடந்த 23ம் தேதி டிவி நிகழ்ச்சியில் அவரது மகன் ஜோனாத்தன் லாம்ப் பேசுகையில், தனது தந்தை கோவிட்டால் பாதிக்கப்பட்டது, எதிரிகள் ஆன்மிக ரீதியில் நடத்திய தாக்குதல் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. தொற்றுநோய் மற்றும் கோவிட் சிகிச்சைக்கான சில வழிகள் பற்றி அனைவருக்கும் தெரிவிக்க எனது பெற்றோர் மருத்துவமனை சென்றுள்ளனர். இதனால், எதிரிகளுக்கு சந்தோஷம் ஏற்படவில்லை என்பதிலும் சந்தேகம் இல்லை என தெரிவித்திருந்தார்.

ஜோனி லாம்ப் பேசும் போது, கோவிட்டால் பாதிக்கப்பட்டது என்பது ரோலர் கோஸ்டரில் பயணம் செய்வது போன்றது. மார்கஸ் நுரையீரல் சுத்தமாகவும், கோவிட்டில் இருந்து மீளவும் மக்கள் பிரார்த்தனை நடத்த வேண்டும். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கவும் பிரார்த்தனை செய்யுங்கள். அப்போது தான் அவர் வீடு திரும்புவார் எனக்கூறியிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-டிச-202118:40:14 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan ஜீசஸ் ..ஹெல்ப் பண்ணி விட்டார் ..
Rate this:
Cancel
Yesappa - Bangalore,இந்தியா
03-டிச-202116:50:52 IST Report Abuse
Yesappa சரி,, இந்த ஆளுங்க பிரார்த்தனை யை நம்பலாமா கூடாதா? எனக்கே இப்போ சந்தேகமாய் இருக்கு .. ஏசப்பா
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
03-டிச-202105:16:41 IST Report Abuse
NicoleThomson லாம்ப் என்றால் ஆட்டுக்குட்டி என்றுதானே அர்த்தம் ஜோனாதன் ? அது சரி இன்னமுமா இந்த உலகம் நம்மை நம்புது , டிவி சேனல் வைத்திருந்தாராம் இப்போ புரியுது தட்சிணாமூர்த்தியின் நிதி எங்கிருந்து வந்தது என்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X