கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கேந்திரிய வித்யாலாயாவில் தமிழ் பயிற்று மொழி; வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (55)
Share
Advertisement
மதுரை: தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் செல்வகுமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தாய்மொழி புறக்கணிக்கப்படுகிறது. தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்
Madurai, KV Schools, Tamil, Language, Tamilnadu, தமிழகம், தமிழ் மொழி, கேந்திரிய வித்யாலயா, பள்ளி, பயிற்று மொழி, மதுரை, உயர்நீதிமன்ற கிளை, தள்ளுபடி

மதுரை: தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் செல்வகுமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தாய்மொழி புறக்கணிக்கப்படுகிறது. தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்,' எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மத்திய அரசு தரப்பில், கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் விருப்பப் பாடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


இதனையடுத்து நீதிபதிகள் கூறுகையில், 'கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் பாடம் உள்ளது. ஆனால் அங்கு தமிழ்வழி கல்வி தேவை என உரிமை கோர முடியாது. தமிழ்வழியில் படிக்க விரும்பினால் அப்பள்ளிகளுக்கு ஏன் செல்ல வேண்டும்,' என கேள்வி எழுப்பி, தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கினை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் இன்று (டிச.,02) உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
03-டிச-202107:19:56 IST Report Abuse
Lion Drsekar பொதுநல விரும்பிகள் திருடர்கள், வழிப்பறிக்கொள்ளையர்கள், சமூக விரோதிகளுக்கு எதிர்கிறாக பாதுகாப்பு கருதி செயல்பட்டால் இவர்களை உலகம் பாராட்டும். முன்பே பல நிலைப்பாடுகளில் பற்றி எரியும் ஜாதி, மத , மொழி யில் எண்ணையை ஊற்றியது போல் நமது செயல்பாடுகள் இல்லாமல் எல்லோருக்கும் பொதுவான பாதுகாப்பு அம்சத்துக்கு இதுவரை யாருமே முன்வராதது சற்று வருத்தம் அளிக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
03-டிச-202106:44:50 IST Report Abuse
Loganathan Kuttuva கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் ராணுவத்தில் வேலை செய்யும் குழந்தைகளுக்கு முன்னுரிமை .
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
03-டிச-202105:05:09 IST Report Abuse
J.V. Iyer தமிழக அரசியல்வாதிகள் நடத்தும் பள்ளிகளில் தமிழை முதலில் கொண்டுவாருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X