தர்மபுரி: ஓய்வூதிய நிலுவை தொகை வழங்க, 34 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, வனத்துறையை சேர்ந்த இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி, எஸ்.வி., ரோட்டை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற வனவர் சின்னச்சாமி. இவரது மனைவி சென்னம்மாள். இருவரும் இறந்து விட்டார். கணவரை இழந்த இவர்களது மகள் சாந்தி, வனத்துறை சார்பில் ஓய்வூதியம் பெற்று வருகிறார். கடந்த, 2007 முதல், 2010 வரையிலான ஓய்வூதிய தொகை, நான்கு லட்ச ரூபாய் நிலுவையில் இருந்தது. இதை வழங்கும் படி, தர்மபுரி மாவட்ட வன அலுவலர் வளாகத்திலுள்ள சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட வன அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக பணியாற்றும் பழனிசாமி, 54, என்பவரை, சாந்தி தன் உறவினர் முருகனுடன் சென்று பேசியுள்ளார். அப்போது பழனிசாமி, நிலுவை தொகையை வழங்க, 34 ஆயிரத்து, 410 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து முருகன், தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாயை நேற்று மாலை, 4:00 மணிக்கு, கோட்ட அலுவலகத்திலிருந்த பழனிசாமியிடம் முருகன் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பழனிசாமியை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE