‛ஒமைக்ரான்' விடைக்கு தொடர்ந்து ஆய்வுகள் தேவை: உலக சுகாதார அமைப்பு

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஜெனிவா: ‛‛தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்க தொடர்ந்து ஆய்வுகள் தேவை,'' என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்துள்ளார்.தென் ஆப்ரிக்காவில்தான் கடந்த மாதம் 24ம் தேதி முதல்முறையாக ஒமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங்,
OmiCron, answer, requires, further research, World Health Organization, Information, ஒமைக்ரான், விடை, தொடர்ந்து ஆய்வு, தேவை, உலக சுகாதார அமைப்பு, அறிவிப்பு

ஜெனிவா: ‛‛தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்க தொடர்ந்து ஆய்வுகள் தேவை,'' என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்துள்ளார்.


latest tamil news


தென் ஆப்ரிக்காவில்தான் கடந்த மாதம் 24ம் தேதி முதல்முறையாக ஒமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரிட்டன், நெதர்லாந்து, செக்குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும், அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் ஜெனிவாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்ற பிரிவான ஒமைக்ரான் வைரஸ் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. முதலில் 4 அல்லது 5 மண்டலங்களில் காணப்பட்ட ஒமைக்ரான் தற்போது 23 நாடுகளுக்கு பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

ஒமைக்ரானின் இந்த வளர்ச்சியை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து மிகத்தீவிரமாக ஒவ்வொரு நாட்டையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. ஆனால், ஒமைக்ரானின் இந்த வளர்ச்சி எங்களுக்கு வியப்பாக இல்லை. வைரஸ்கள் என்ன செய்யுமோ அதைத்தான் செய்கிறது. இந்த வைரஸ் தொடர்ந்து பரவிக்கொண்டேதான் இருக்கும்.


latest tamil news


ஒமைக்ரான் குறித்து நிறைய அறிந்து வருகிறோம். இன்னும் அதன் பரவல் குறித்து அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த நோயின் தீவிரம், பரிசோதனையின் முக்கியத்துவம், தடுப்பூசிகள், சிகிச்சை குறித்து அதிகமாக அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த இரு நாட்களாக உலக சுகாதார அமைப்பின் பல்வேறு ஆலோசனைக் குழுவின் வல்லுநர்கள் சேர்ந்து ஒமைக்ரான் வளர்ச்சி, அதன் வடிவங்கள் குறித்து ஆலோசனை நடத்தி மதிப்பீடு செய்தனர். பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்க தொடர்ந்து ஆய்வுகள் தேவை. இவ்வாறு அதானம் தெரிவி்த்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
03-டிச-202107:17:05 IST Report Abuse
Lion Drsekar இந்திய பாரம்பரிய மருத்துவருக்கு ஆதரவு கொடுத்தால் உலக மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம், டெங்கு, இரத்தில் உள்ள சிகப்பணுக்கள் உயர்த்துவது உயர்த்துவது, மற்றும் பல நோய்களுக்கு நமது சித்த மருத்துவம் பலன் கொடுத்திருக்கிறது அந்த மூலிகைகளை வைத்துக்கொண்டு ஆங்கில மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப்படுவது பாராட்டப்படவேண்டிய ஒன்று, வந்தே மாதரம்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
03-டிச-202100:22:08 IST Report Abuse
M  Ramachandran இதை திட்டமிட்டு பரப்பும் உங்கள் நட்பு இடம் கேட்க்க கூடாதா?
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
02-டிச-202121:05:06 IST Report Abuse
J.Isaac இந்த ஆளை முதலில் விலக்கினால் கொரனோ ஒழியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X