காங்., இல்லாத கூட்டணி ஆன்மா இல்லாத உடல்: கபில் சிபல் சிபல் வர்ணனை

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது இப்போது இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்திருந்த நிலையில், காங்., மூத்த தலைவர் கபில் சிபல், ‛‛காங்கிரஸ் இல்லாத ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆன்மா இல்லாத உடல் போன்றது தான்,'' என கூறினார்.கடந்த 2019 பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் படுதோல்வி அடைந்தது. அதன்
Alliance, Without Congress, Body Without Soul, Kapil Sibal, Congress, காங்கிரஸ் இல்லாத கூட்டணி, ஆன்மா, இல்லாத உடல், காங்கிரஸ், மூத்த தலைவர், கபில் சிபல்,

புதுடில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது இப்போது இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்திருந்த நிலையில், காங்., மூத்த தலைவர் கபில் சிபல், ‛‛காங்கிரஸ் இல்லாத ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆன்மா இல்லாத உடல் போன்றது தான்,'' என கூறினார்.

கடந்த 2019 பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர் தலைமை பொறுப்பை ராகுல் ராஜினாமா செய்தார். இடைக்காலத் தலைவராக செயல்பட்ட சோனியா, கட்சியினரின் அதிருப்தியால் முழு நேர தலைமைப் பொறுப்பை கடந்த அக்டோபரில் ஏற்றார். உள்கட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பரில் அது முடிவடைந்து தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியை தேசிய அளவிலான எதிர்க்கட்சியாக வளர்க்க நினைக்கிறார் மம்தா பானர்ஜி. ஏற்கனவே கோவா, மேகலாயாவில் காங்கிரஸின் இடத்தை திரிணமுல் கைப்பற்றிவிட்டது. அங்கிருந்தவர்கள் கூண்டோடு மம்தாவை சந்தித்து திரிணமுல் கட்சியில் இணைந்தனர். இதன் பின்னணியில் பிரசாந்த் கிஷோர் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று சரத்பவாரை சந்தித்து மாற்று அணி குறித்து மம்தா பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, ‛‛ஐக்கிய முற்போக்கு கூட்டணி என ஒன்றும் இல்லை; அது மறைந்துவிட்டது,'' என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்., மூத்த தலைவர் கபில் சிபல் கூறியதாவது: காங்கிரஸ் இல்லாத ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது ஆன்மா இல்லாத உடலாகத் தான் இருக்கும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் காட்ட வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் கூறினார்.

ராஜ்யசபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு தங்களுக்குள் சண்டையிடக்கூடாது, பா.ஜ.,விற்கு எதிராக நாம் ஒன்றாகப் போராட வேண்டும்," என்றார்.


ஆதிர் ரஞ்சன் சவுத்ரி


இது குறித்து காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: ஐ.மு.கூட்டணி என்றால் என்ன என்று மம்தா பானர்ஜிக்குத் தெரியாதா? பைத்தியக்காரத்தனத்தை அவர் துவங்கி விட்டார். ஒட்டுமொத்த இந்தியாவும் ஏதோ மம்தா, மம்தா என்று கோஷமிடுவது போல் அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்தியா என்பது மேற்குவங்கம் மட்டுமல்ல. அவரது மாநிலத்தில் (மேற்குவங்கம்) கடந்த தேர்தலில் அவர் கையாண்ட உத்திகள் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகி வருகின்றன. 2

012-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் 6 அமைச்சர்கள் இருந்தனர். அப்போது ஐ.மு.கூட்டணி அரசை கவிழ்க்க ஆதரவை வாபஸ் பெற்றவர்தானே மம்தா, இப்போது ஐ.மு.கூட்டணி என்றால் என்ன என்று கேட்கிறார். ஆனால் அன்று அவரது சூழ்ச்சி பலிக்கவில்லை மற்ற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளித்தன. மம்தா இன்று பெரிய ஆளாக தன்னை நினைத்துக் கொள்ள அவருக்குப் பின்னால் மோடி இருக்கிறார். அதனால்தான் காங்கிரஸை பலவீனப்படுத்த அவர் முயற்சிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-டிச-202109:13:47 IST Report Abuse
பேசும் தமிழன் கான் கிராஸ் ஏற்கெனவே செத்து போன கட்சி.... செத்த உடலை யாராவது தூக்கி கொண்டு அலைவார்களா???
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
03-டிச-202108:22:43 IST Report Abuse
elakkumanan கான் கிராஸ் என்பது இனிமேல் எழுந்து வருவதற்கு வாய்ப்பில்லை.. ராவுளும் அவரது அம்மாவும் செய்த, செய்யும் கூத்துக்கள், அந்த கட்சியின் நிரந்தர அமைதிக்கே இட்டுச் செல்கிறது.. மயான அமைதி.. எங்க ஊரிலும், இன்னும் கொஞ்ச நாளில், மயான அமைதியை நோக்கிய பயணத்துக்கு ஒரு கும்பல் கெளம்பீடுவாங்க.. போஸ்டர் ஒட்டுறவனுக்கு சரக்கு,ஓசி பிரியாணி போதும்.போஸ்டர் ஓட்டும் நபரின் குழந்தைகள் அந்த பணியை தொடர வாய்ப்பு இல்லை. இல்லையா? எனவே, அடிமை வம்ச (கில்ஜி வம்சம்) ஆட்சி முடிவுக்கு வருகிறது..எங்க ஊரிலும் வரும்....அடிமை என்பது, அடிபணிந்து போகும் குணம் சார்ந்த வகைப்பாடு.. யாருக்கு அடிமையாக இருக்கிறோம் என்பதை பொறுத்ததல்ல.. பழைய அடிமை (தனி நபர் விஷயம்) மற்றும் புதிய அடிமை (கும்பலாக செய்வது, தத்துவார்த்த ரீதியாக ஒரு மொக்கையான விளக்கத்தை கொடுத்து, விலையை கொடுத்து, மொத்தவிலைக்கு அடிமைகளை வாங்கிவிடுவது..புரியலையா பாஸூ... அதாவது, நமக்கு திருட்டு.. திருடனுக்கு, அதுதானே தொழில் ..இப்போ??) எல்லாருக்கும் பொருந்தும்..
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
03-டிச-202107:14:07 IST Report Abuse
Lion Drsekar ஆன்மாவுக்கும் இவருக்கும் ....? பாவம் இவரும் ஒருநாள் நம்மைப்போல் இகழ்வார் மறுநாள் போற்றுவார், மீண்டும் அமைச்சர் பதவி வராதா என்று ஏங்குபவர்களில் இவரும் ஒருவர், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X