காங்., தலைமை சிலரது உரிமை கிடையாது: பிரசாந்த் கிஷோர்

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: ''காங்., தலைமை என்பது சிலரது புனித உரிமை கிடையாது'' என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.பீஹாரைச் சேர்ந்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரசில் சேரப்போவதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. கட்சியில் பிரசாந்த் கிஷோரை சேர்க்க, காங்., மூத்த தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே அதிருப்தியடைந்த பிரசாந்த் கிஷோர்,
PrashantKishor,  RahulGandhi, congress, cong

புதுடில்லி: ''காங்., தலைமை என்பது சிலரது புனித உரிமை கிடையாது'' என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

பீஹாரைச் சேர்ந்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரசில் சேரப்போவதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. கட்சியில் பிரசாந்த் கிஷோரை சேர்க்க, காங்., மூத்த தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே அதிருப்தியடைந்த பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைமையையும், கட்சியையும் பகிரங்கமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமர்சித்திருந்தார்.

பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசின் தேர்தல் வியூக நிபுணராக பணியாற்றினார். அங்கு அக்கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, நாடு முழுவதும் கட்சியை விரிவுபடுத்தவும், புதிய அணி அமைக்கவும் திரிணமுல் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார். நேற்று மும்பையில் நிருபர்களை சந்தித்த மம்தா, காங்கிரஸ் மற்றும் ராகுலை சாடியிருந்தார்.


latest tamil news


இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கை மற்றும் அதற்கான இடம் ஒரு வலுவான எதிர்க்கட்சிக்கு இன்றியமையாதது. ஆனால், காங்கிரசின் தலைமை என்பது ஒரு சிலரிருக்கு கொடுக்கப்பட்ட புனித உரிமை அல்ல. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் அக்கட்சி 90 சதவீதம் அதிகமான தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சி தலைமைப்பதவி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-டிச-202107:32:20 IST Report Abuse
பேசும் தமிழன் அய்யா அப்படி எடுத்து சொல்லுங்க.... இத்தாலி போலி காந்தி குடும்பத்தை கட்சியில் வைத்து இருந்தால்... கட்சிக்கு ஆகாது என்று நன்றாக சத்தம் போட்டு சொல்லுங்க.... ப சி, EVKS இலங்ககாவன் மற்றும் அழு மூஞ்சி அழகிரி... மணி அக்கா போன்றவர்களுக்கு புரிய மாட்டேங்குது
Rate this:
Cancel
சிவா - Aruvankadu,இந்தியா
02-டிச-202122:04:36 IST Report Abuse
சிவா அட போடா.. எங்க தமிழ் நாடு எம் எல் ஏ ஒருவர் பீகாரிகளுக்கு .. கிடையாது என்று தமிழ் நாட்டில் தன் கண்டுபிடிப்பை சொன்னது தெரியவில்லை.. உனக்கு 2022 மிக பெரிய ஆப்பு இருக்கு. திமுகவிடம் வாங்கிய 500 கோடி ரூபாய் க்கு ஒழுங்கா வரி கட்டினியா.?
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
02-டிச-202121:53:10 IST Report Abuse
srinivasan Gandhi family...4 sons. Second, third. Fourth generations...no one has been tolerated by Nehru family. Instead fake gandhis are in the lead. Nehru dynasty hijacked Gandhi's name
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X