யோகி ஆட்சியில் குறைந்த குற்றச் சம்பவங்கள்: அமித்ஷா

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
லக்னோ: உத்தர பிரதேசத்தில் யோகி ஆட்சியில் குற்றச் சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேசம் மாநிலம் சஹாரன்பூரில் 'மா ஷாகாம்பரி' பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அமித்ஷா
AmitShah, UP, Yogi Government, Dacoity, Gone Down , அமித்ஷா, உத்தரபிரதேசம், யோகி ஆதித்யநாத், குற்றச் சம்பவங்கள், குற்றம், கொள்ளை, குறைவு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் யோகி ஆட்சியில் குற்றச் சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் சஹாரன்பூரில் 'மா ஷாகாம்பரி' பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: உ.பி.,யில் முன்பெல்லாம் வன்முறை மட்டுமின்றி பாதுகாப்பும் இல்லாததால் பெண் குழந்தைகளை வேறு மாநிலங்களுக்கு படிக்க அனுப்ப வேண்டிய நிலை இருந்தது.


latest tamil news


ஆனால், தற்போது மேற்கு உ.பி.யில் எந்த மகளும் படிப்புக்காக வெளியில் செல்ல வேண்டியதில்லை. அவர்களிடம் தவறாக நடந்து கொள்ள யாருக்கும் தைரியம் இல்லை. உ.பி.,யில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அகிலேஷ் யாதவ் பேசியதை தொலைக்காட்சியில் பார்த்தேன். அகிலேஷ் அவர்களே, உங்கள் கண்ணாடியை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்? நீங்கள் என்ன கண்ணாடிகளைப் பயன்படுத்துகிறீர்கள்? யோகி ஆட்சிக்கும், உங்களது 5 ஆண்டுகால ஆட்சிக்குமான ஒப்பீட்டை நான் கொண்டுவந்துள்ளேன்.

யோகி ஆட்சியில் கொள்ளை சம்பவங்கள் 70 சதவீதம் குறைந்துள்ளது. ஆயுதங்களைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் 69 சதவீதமும், கொலைகள் 30 சதவீதமும், வரதட்சணை காரணமாக ஏற்படும் இறப்புகள் 22.5 சதவீதமும் குறைந்துள்ளன. வீட்டிற்குச் சென்று தரவைச் சரிபார்க்கவும். உங்கள் ஆட்சியில் உ.பி.யில் மாபியா ஆட்சி இருந்தது, இன்று உ.பி.யில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


500 ஆண்டுகால காத்திருப்பு


latest tamil news


இதே நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: முந்தைய அரசாங்கங்கள் மாநில வளர்ச்சிக்காகவும், ஏழைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் எதுவும் செய்யவில்லை. கடைசி நான்கரை ஆண்டுகள் உ.பி.,யில் வன்முறை எதுவும் நடைபெறவில்லை. மக்கள் சுதந்திரமாக நிம்மதியாக ஹோலி, தீபாவளி, துர்கா பூஜை உள்ளிட்டவற்றை கொண்டாடுகின்றனர்.

500 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அயோத்தி தயாராக உள்ளது. இதற்கெல்லாம் காரணம் இன்று நாடு பாதுகாப்பான கரங்களில் உள்ளது. நாட்டின் வளர்ச்சியில் உ.பி., முக்கிய பங்கு வகிக்கிறது. பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷாவின் தலைமையில், உ.பி., வளர்ச்சி பாதையில் செல்வதற்கு இந்த பல்கலைக்கழகம் ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilReader - Dindigul,இந்தியா
03-டிச-202107:36:57 IST Report Abuse
TamilReader இவர் "யோகி ஆட்சி" என்று தான் சொன்னார் BJP ஆட்சியில் குறைந்த குற்றச் சம்பவங்கள் என்று சொல்லவில்லை
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
03-டிச-202107:09:33 IST Report Abuse
Lion Drsekar இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர், எதிர்பார்த்தனர், பாராட்டுக்கள், ஒரே ஒரு வருத்தம் சமூக விரோதிகள் இல்லாமல் இருந்தால் .... எப்படி வளரும் ? இவர்களது மூலதனம் சமூக விரோதிகள்தானே ? வந்தே மாதரம்
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
02-டிச-202123:26:58 IST Report Abuse
Suri இவங்க நடத்தை செய்கை எல்லாம் எப்படி இருக்கும் என்பதற்கு இப்படி பேசுவது ஒரு தெளிவான எடுத்துக்காட்டு. இவர்களை இன்னுமா பாரதம் நம்புது? வெட்கக்கேடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X