300 இடங்களில் காங்., வெற்றி: குலாம் நபி ஆசாத் சந்தேகம்

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தனித்து 300 இடங்களில் வெற்றி பெறும் என உறுதியாக கூற முடியாது என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக, பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த பேரணியில் பங்கேற்ற குலாம் நபி ஆசாத் பேசியதாவது: காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் சுப்ரீம்
congress, GUlamnabiazad, காங்கிரஸ், குலாம்நபிஆசாத்,

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தனித்து 300 இடங்களில் வெற்றி பெறும் என உறுதியாக கூற முடியாது என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக, பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த பேரணியில் பங்கேற்ற குலாம் நபி ஆசாத் பேசியதாவது: காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. நம் கைகளில் இல்லாத ஒன்றை குறித்து, மக்களை திருப்தி படுத்துவதற்காக அதனை தெரிவிக்க முடியாது. சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டு யாரேனும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றால்,அது மத்திய அரசு தான். சட்டம் நீக்கப்பட்டதற்கும் அந்த அரசிற்கு தான் பொறுப்பு. அப்படி இருக்கையில் அவர்கள் எப்படி மீண்டும் சிறப்பு அந்தஸ்தை தருவார்கள்.


latest tamil news




எங்களிடம் 300 எம்.பி.,க்கள் இல்லை. 2024 லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் 300 இடங்களில் வெற்றி பெறும், நாங்கள் ஏதாவது செய்வோம் என உறுதியாக கூற முடியாது. கடவுள் விரும்பினால், நாங்கள் வெற்றி பெறுவோம். ஆனால், அதுதற்போது நடக்கும் என நினைக்கவில்லை. இதனால், பொய் வாக்குறுதி அளிக்க விரும்பவில்லை. இவ்வாறு குலாம்நபி ஆசாத் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-டிச-202110:51:41 IST Report Abuse
அப்புசாமி காங்கிரசில் உள்ள கெழ போல்ட்டுகள் விட்டுக் கொடுத்து பதவிகளில் இருந்து வெளியேறினால் ஏதாவது தேறலாம். இல்லேன்னா, இங்கே வைகோ, திருமா மாதிரி மாநிலத்துக்கு ஒண்ணு, இரண்டு தேறும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
03-டிச-202107:03:47 IST Report Abuse
Lion Drsekar சுதந்திரம் பெற்றவெற்றி முழுவதுமே அரசியல் கட்சிகளுக்குத்தானே தவிர ?? வந்தே மாதரம்
Rate this:
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
03-டிச-202103:30:13 IST Report Abuse
Ambika. K 300 என்றால் 3 போட்டு பிறகு இரண்டு சைபர் போடுவார்கள் அந்த 300 தானே. முதலில் 30 தேருமா பாருங்க பிறகு 300 ஐ பார்க்கலாம்.
Rate this:
Sugavanam Krishnamurti - Coimbatore,இந்தியா
03-டிச-202108:49:31 IST Report Abuse
Sugavanam Krishnamurtiமுதலில் மூணு தேருமா பாருங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X