பொது செய்தி

இந்தியா

புத்தாண்டிலிருந்து ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் உயர்கிறது

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
மும்பை: மத்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 1, 2022 முதல் ஏ.டி.எம்.,களில் மாதாந்திர இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பயன்படுத்துபவர்களுக்கான கட்டணத்தை ரூ.21 ஆக உயர்த்திக்கொள்ள அனுமதித்திருப்பதால் அடுத்தாண்டு முதல் ஒரு பரிவர்த்தனைக்கான ஏ.டி.எம்., கட்டணம் ஜி.எஸ்.டி., உடன் ரூ.25 ஆக வசூலிக்கப்படும்.வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தற்போது தங்கள் வங்கி ஏ.டி.எம்.,களில் ஒரு மாதத்திற்கு 5 முறை
New Year, ATM, Transaction, Fees, Rise, RBI, Approval, புத்தாண்டு முதல், ஏடிஎம், பரிவர்த்தனை, கட்டணம், உயர்கிறது,

மும்பை: மத்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 1, 2022 முதல் ஏ.டி.எம்.,களில் மாதாந்திர இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பயன்படுத்துபவர்களுக்கான கட்டணத்தை ரூ.21 ஆக உயர்த்திக்கொள்ள அனுமதித்திருப்பதால் அடுத்தாண்டு முதல் ஒரு பரிவர்த்தனைக்கான ஏ.டி.எம்., கட்டணம் ஜி.எஸ்.டி., உடன் ரூ.25 ஆக வசூலிக்கப்படும்.


latest tamil news


வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தற்போது தங்கள் வங்கி ஏ.டி.எம்.,களில் ஒரு மாதத்திற்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம் அல்லது இருப்பை பரிசோதிக்கலாம். பிற வங்கி ஏ.டி.எம்.,களில் என்றால் மெட்ரோ நகரங்களில் 3 முறை கட்டணமின்றி பயன்படுத்தலாம். ஊரகப் பகுதிகள் என்றால் 5 முறை கட்டணம் கிடையாது. அதன் பிறகு பணம் எடுத்தாலோ, இருப்பை பரிசோதித்தாலோ ஒரு பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி., உடன் ரூ.23.6 கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.


latest tamil news


இந்நிலையில், ரிசர்வ் வங்கி இக்கட்டணத்தை ஜனவரி 1, 2022 முதல் ரூ.24.78 ஆக உயர்த்திக் கொள்ள அனுமதியளித்தது. அதிக பரிமாற்றக் கட்டணத்தை வங்கிகளுக்கு ஈடுகட்டவும், செலவுகள் அதிகரித்திருப்பதாலும் பரிவர்த்தனைக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதித்ததாக ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.

அதே போல், கடந்த ஆகஸ்ட் முதல் பரிமாற்றக் கட்டணம் எனப்படும், பிற வங்கி ஏ.டி.எம்.,களை ஒருவர் பயன்படுத்தும் அவரது வங்கி செலுத்தும் கட்டணமும் ரூ.15லிருந்து ரூ.17 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - chennai,இந்தியா
08-டிச-202115:09:30 IST Report Abuse
Indian thanks for raising charges, We can collect all amount in shot, we can boycott digital transaction. what is answer ? பணம் எடுக்கும்போது என் வங்கியில் பணம் இல்லை என்று வருகிறது. அதனால் நான் இன்னொரு ATM இல் பணம் எடுத்தால் எனக்கு பணம் போகிறது. எல்லா வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் எனக்கு சேவை குறைபாட்டுக்கு கட்டணம் தரவேண்டும் .
Rate this:
Cancel
Karthik - chennai,இந்தியா
03-டிச-202118:28:06 IST Report Abuse
Karthik எங்க பணத்தை வங்கியில் போட்டு எடுப்பதற்கு எதுக்கு உங்களுக்கு கட்டணம் கொடுக்கணும் ? எங்களது பணத்தை நீங்கள் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறீர்கள் .இது அநியாயம்
Rate this:
Cancel
Senthil Kumar - Chennai,இந்தியா
03-டிச-202110:03:23 IST Report Abuse
Senthil Kumar வணக்கம். பணம் எடுக்கும்போது என் வங்கியில் பணம் இல்லை என்று வருகிறது. அதனால் நான் இன்னொரு ATM இல் பணம் எடுத்தால் எனக்கு பணம் போகிறது. எல்லா வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் எனக்கு சேவை குறைபாட்டுக்கு கட்டணம் தர வேண்டும். இப்படி ஒரு சட்டம் ஆர் பி ஐ கொண்டு வரவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X