சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு : ரூ. 4.53 லட்சம் பறிமுதல்

Added : டிச 02, 2021
Share
Advertisement
குன்னுார் : குன்னூர் ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தில் கணக்கில், 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.நீலகிரி மாவட்டம், குன்னூர் ஜெகதளா பேரூராட்சியில் விதிமீறிய கட்டடங்கள் அதிகளவில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் அலுவலகத்தில் லஞ்சம் அதிகளவில் பெறுவதாக புகார்கள் உள்ளன. இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஒழிப்பு துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், நீலகிரி மாவட்ட லஞ்ச
ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு :  ரூ. 4.53 லட்சம் பறிமுதல்

குன்னுார் : குன்னூர் ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தில் கணக்கில், 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஜெகதளா பேரூராட்சியில் விதிமீறிய கட்டடங்கள் அதிகளவில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் அலுவலகத்தில் லஞ்சம் அதிகளவில் பெறுவதாக புகார்கள் உள்ளன.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஒழிப்பு துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர், நேற்று அலுவலகத்தில் திடீர் சோதனை செய்தனர்.இதில் கணக்கில் வராத 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X