தள்ளு...தள்ளு.. தள்ளு... டயர் பஞ்சராகி நின்ற விமானத்தை கைகளால் தள்ளிய ஊழியர்கள்: வைரலாகும் வீடியோ

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
காத்மாண்டு: சாலையில் பழுதாகி நிற்கும் கார், லாரி, பஸ் போன்ற வாகனங்களை கையால் தள்ளி பார்த்திருக்கிறோம். ஆனால் ஓடு தளத்தில் டயர் பஞ்சராகி நின்ற பயணிகள் விமானத்தை கைகளால் தள்ளிய சம்பவம் நேபாளம் நாட்டில் நிகழ்ந்துள்ளது.நேபாளம் நாட்டின் காத்மாண்ட் நகரை தலைமையிட கொண்ட யீட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் , பஜூரா மாவட்டத்தில் உள்ள கோல்டி சர்வதேச
Passengers and airport staff push pதள்ளு...தள்ளு.. தள்ளு... டயர் பஞ்சராகி நின்ற விமானத்தை கைகளால் தள்ளிய ஊழியர்கள்: வைரலாகும் வீடியோlane off runway in Nepal after tyre burst; clip goes viral

காத்மாண்டு: சாலையில் பழுதாகி நிற்கும் கார், லாரி, பஸ் போன்ற வாகனங்களை கையால் தள்ளி பார்த்திருக்கிறோம். ஆனால் ஓடு தளத்தில் டயர் பஞ்சராகி நின்ற பயணிகள் விமானத்தை கைகளால் தள்ளிய சம்பவம் நேபாளம் நாட்டில் நிகழ்ந்துள்ளது.

நேபாளம் நாட்டின் காத்மாண்ட் நகரை தலைமையிட கொண்ட யீட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் , பஜூரா மாவட்டத்தில் உள்ள கோல்டி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கியது. அப்போது விமானத்தின் பின்பக்க டயர் வெடித்தது. பஞ்சாராகி ஓடுதளத்தில் நடுவில் நின்றதால் விமானத்தை நகர்த்த முடியவில்லை. இந்நிலையில் அதே ஓடுதளத்தில் மற்றொரு விமானம் தரையிறங்க முயன்றது. ஆனால் அந்த விமானம் தரையிறங்க முடியவில்லை.


latest tamil news
உடனே விமானத்தில் பயணித்த பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் விமானத்தை கைகளால் தள்ளி சென்றனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.நெட்டிசன்கள் ஷேர் செய்தனர்,


முன்னதாக மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா என்ற இடத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் ரயில்வே வழித்தடத்தில் சென்ற ரயில் தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்றது. இதையடுத்து, ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு ரெயில் பெட்டியை கைகளால் தள்ளிச் சென்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
03-டிச-202108:43:14 IST Report Abuse
 rajan ஓ! மலைமீது உள்ள ஓடுதளமா அப்படியே கீழே தள்ளி விட்டிருக்கலாமே.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
03-டிச-202108:42:02 IST Report Abuse
 rajan டிரக்டர் எல்லாம் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் பத்து அதிகாரிங்க சம்மதம் வேண்டும். லட்ச ரூபாய் வாடகை கேப்பான். அதுக்கு இது பரவாயில்லையே.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
03-டிச-202105:09:28 IST Report Abuse
NicoleThomson அப்படி தள்ளு அப்படி தள்ளு என்று கோரஸ் போட்டு தள்ளினார்களா ஆனால் டீம் ஒர்க் தான் எப்போதும் வெல்லும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X