பொது செய்தி

இந்தியா

சர்ச்சையை கிளப்பும் ஆராக்ஷான்: அரசியல் கட்சிகள் போர்க்கொடி

Added : ஆக 07, 2011
Share
Advertisement
மும்பை: இந்திய கல்வித்துறையில் இடஒதுக்கீட்டு முறையை விமர்சித்து எடுக்கப்பட்டுள்ள ஆராக்ஷான் திரைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பிரகாஷ் ஜா இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மனோஜ் பாஜ்பாய், தீபிகா படுகோனே, சயீப் அலிகான் உள்ளிட்டோர் நடித்து, வரும் 12ம் தேதி
சர்ச்சையை கிளப்பும் ஆராக்ஷான்: அரசியல் கட்சிகள் போர்க்கொடி

மும்பை: இந்திய கல்வித்துறையில் இடஒதுக்கீட்டு முறையை விமர்சித்து எடுக்கப்பட்டுள்ள ஆராக்ஷான் திரைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.


பிரகாஷ் ஜா இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மனோஜ் பாஜ்பாய், தீபிகா படுகோனே, சயீப் அலிகான் உள்ளிட்டோர் நடித்து, வரும் 12ம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் ஆராக்ஷான். இப்படம் இந்திய கல்வித்துறையில் இடஒதுக்கீட்டு முறையை விமர்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மாயாவதி, லாலு உள்ளிட்ட அரசியல்வாதிகள் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


மாயாவதி அனுமதி மறுப்பு: ஆராக்ஷான் படத்தை திரையிட உ.பி., அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. இந்நிலையில், படத்தை பிரபலப்படுத்துவதற்காக உ.பி., தலைநகர் லக்னோவில் நடப்பதாக இருந்த நிகழ்ச்சிக்கும் அம்மாநில முதல்வர் மாயாவதி அனுமதி மறுத்துள்ளார். இந்நிகழ்ச்சியில், அமிதாப் பச்சன், மனோஜ் பாஜ்பாய், தீபிகா படுகோனே, சயீப் அலிகான் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக இருந்தது.


லாலுவுக்கு எதிர்ப்பு: படத்திற்கு ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவும்வ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். படம் குறித்து லாலு கூறுகையில், இந்தியா ஜாதிகளை அடிப்படையாகக்கொண்ட ஒரு நாடு. எந்த ஒரு ஊடகமும் ஜாதியை மையமாகக்கொண்டு பிரச்னைகளை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.


பிரகாஷ் ஜா விளக்கம்: ஆராக்ஷான் படம் குறித்து அதன் இயக்குநர் பிரகாஷ் ஜா கூறுகையில், இப்படத்திற்கு மத்திய சென்சார் போர்டு எவ்வித எதிர்ப்பும் இன்றி யு/ஏ சர்டிபிகேட் கொடுத்து அனுமதித்துள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்கு எதிராக பலரும் குரல் எழுப்புவது ஏன் என்றே புரியவில்லை என்று தெரிவித்தார். ஆனால் இதில் உண்மை என்னவெனில், இப்படத்தை இதுவரை யாரும் பார்க்கவில்லை. ஆனால் அனுமானத்தின் அடிப்படையிலும், வதந்தியின் அடிப்படையிலும் படத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று தெரிவித்தார். லாலு பிரசாத் யாதவின் எதிர்ப்பையடுத்து அவருக்கு சிறப்பு காட்சி போட்டு காட்டும் எண்ணம் ஏதுமில்லை என்று தெரிவித்துள்ள பிரகாஷ் ஜா, அவர் படம் பார்க்க வேண்டுமானால் வரும் 12ம் தேதி பார்த்துக்கொள்ளட்டும் என்றும் தெரிவித்தார்.


வீடு அலுலகம் தாக்குதல்: ஆராக்ஷான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் உள்ள பிரகாஷ் ஜாவின் வீடு மற்றும் அலுவலகத்தை இந்திய குடியரசு கட்சி (ஆர்.பி.ஐ.,)யைச் சேர்ந்தவர் அடித்து நொறுக்கினர். எனினும் இச்சம்பவத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை.


19 பேர் கைது: ஆராக்ஷான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அகில் பாரதிய மகாத்மா புலே சமதா பரிஷத் இயக்கத்தைச் சேர்ந்த 6 பேரும், இந்திய குடியரசு கட்சி (ஆர்.பி.ஐ.,) கட்சியைச் சேர்ந்த 13 பேரும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஷபானா ஆஸ்மி ஆதரவு: ஆராக்ஷான் படத்தை எதிர்ப்பவர்களை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள பிரபல நடிகையும், சமூக சேவகியுமான ஷபானா ஆஸ்மி, இது மிகவும் வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X