திருமண விழாவில் களை கட்டிய சிவசேனா எம்.பி.,சஞ்சய் ராவத், சுப்ரியா சுலே நடனம் | Dinamalar

திருமண விழாவில் களை கட்டிய சிவசேனா எம்.பி.,சஞ்சய் ராவத், சுப்ரியா சுலே நடனம்

Updated : டிச 02, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (11)
மும்பை: மகா விகாஸ் அகாடி தலைவர்கள் சஞ்சய் ராவத் மற்றும் சுப்ரியா சுலே ஆடிய நடனம் களை கட்டியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா காங்கிரஸ் தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனாவின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத்தின் மகள் பூராஷி ராவத் திருமணம் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. முன்னதாக நடந்த திருமண விழாவில் பல்வேறு கட்சி பிரமுகர்கள்,

மும்பை: மகா விகாஸ் அகாடி தலைவர்கள் சஞ்சய் ராவத் மற்றும் சுப்ரியா சுலே ஆடிய நடனம் களை கட்டியது.



latest tamil news



மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா காங்கிரஸ் தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனாவின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத்தின் மகள் பூராஷி ராவத் திருமணம் திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

முன்னதாக நடந்த திருமண விழாவில் பல்வேறு கட்சி பிரமுகர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் மகளும் பார்லி.,எம்.பி.யுமான சுப்ரியா சுலேவும் கலந்து கொண்டார்.


latest tamil news



விழாவில் இசையுடன் கூடிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் புகழ்பெற்ற லம்பெர்கினி சாலி ஜானே ஹோ என்ற பாடல் இசைக்கப்பட்டது. தொடர்ந்து சஞ்சய் ராவத் சுப்ரியாசுலேவிடம் நடனம் ஆட வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து சஞ்சய்ராவத் சுப்ரியே சுலே மற்றும் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் ஆகியோர் இணைந்து ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X