10 ஆண்டுகளில் 90 சதவீத தோல்வி: ராகுலை விமர்சிக்கும் பிரஷாந்த் கிஷோர்

Updated : டிச 04, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (18+ 21)
Share
Advertisement
புதுடில்லி: ''கடந்த 10 ஆண்டுகளில் சந்தித்த தேர்தல்களில் 90 சதவீதம் தோல்வியை சந்தித்துள்ளார். காங்.,கின் தலைமை பொறுப்பு ஒரு தனிப்பட்ட நபருக்கான உரிமை கிடையாது,'' என, காங்., முன்னாள் தலைவர் ராகுலை பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.எதிர்க்கட்சி கூட்டணிமத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமயிலான பா.ஜ., அரசுக்கு எதிராக
Prashant Kishor, Rahul, Rahul Gandhi, Congress

புதுடில்லி: ''கடந்த 10 ஆண்டுகளில் சந்தித்த தேர்தல்களில் 90 சதவீதம் தோல்வியை சந்தித்துள்ளார். காங்.,கின் தலைமை பொறுப்பு ஒரு தனிப்பட்ட நபருக்கான உரிமை கிடையாது,'' என, காங்., முன்னாள் தலைவர் ராகுலை பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.


எதிர்க்கட்சி கூட்டணி


மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமயிலான பா.ஜ., அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 2019 தேர்தலில் ஒன்றுபட்ட எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க நடந்த முயற்சி தோல்வி அடைந்தது. இந் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான காங்.,கில் பல குழப்பங்கள் உள்ளன. தலைமை பொறுப்பை ஏற்க, ராகுல் மறுத்து வருகிறார்.

பல மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தன் தலைமையில் தேசிய அளவில் எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறார். இதற்காக பல தலைவர்களை சந்தித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மஹாராஷ்டிரா சென்று, தேசியவாத காங்., தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார். 'ஐக்கிய முற்போக்கு கூட்டணி தற்போது மறைந்துவிட்டது' என, காங்.,குக்கு எதிராக அவர் கடுமையாக விமர்சித்தார். 'பாதி நேரம் வெளிநாட்டில் இருப்பவரால், எப்படி அரசியல் செய்ய முடியும். அரசியல் என்பது ஒரு தொடர் நடவடிக்கை' என, ராகுலையும் விமர்சித்தார்.

காங்.,கில் இணைவதற்காக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர், கட்சித் தலைமையுடன் பேச்சு நடத்தினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து காங்., குறித்து அவர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக ராகுலை விமர்சித்து வருகிறார்.இந்நிலையில் அவர் கூறியதாவது:மிகவும் வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை அமைப்பதில் காங்.,குக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால், தற்போதுள்ள தலைமையால் அது சாத்தியமில்லை.


தீர்மானிக்க வேண்டும்


கடந்த 10 ஆண்டுகளில் சந்தித்த தேர்தல்களில் 90 சதவீத தோல்வியை ராகுல் சந்தித்துள்ளார். கட்சியின் தலைமை பொறுப்பு என்பது தனக்கான தனிப்பட்ட உரிமையாக அவர் கருதுகிறார். எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பது குறித்து ஜனநாயக முறையில் தீர்மானிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


எல்லையை நிர்ணயிக்க முடியாது!


பிரஷாந்த் கிஷோர் குறிப்பிடும் நபர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிடம் இருந்து இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றும் தன் தெய்வீகக் கடமையை செய்து வருகிறார். எந்தக் கொள்கை வரம்புக்குள்ளும் இல்லாத ஒரு தொழில்முறை நிபுணர், ஒரு அரசியல் கட்சி குறித்தோ, தனிநபர் குறித்தோ கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது. ஆனால் எங்கள் அரசியல் எல்லையை அவர் நிர்ணயிக்க முடியாது.
- பவன் கேரா, செய்தித் தொடர்பாளர், காங்.,

Advertisement




வாசகர் கருத்து (18+ 21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ravichandran - chennai,இந்தியா
03-டிச-202121:42:38 IST Report Abuse
r ravichandran திமுக தேர்தல் கமிஷனுக்கு வெறும் 5 கோடி ரூபாய் மட்டும் பிரசாந்த் கிஷோர் நிறுவனத்திற்கு கொடுத்ததாக கணக்கு காட்டி உள்ளது. இது தேர்தல் கமிஷன் வெப் சைடில் வெளி இட பட்டுள்ளது. இதில் இருந்தே பிரசாந்த் கிஷோர் நேர்மை குறித்து அறிந்து கொள்ளலாம்
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
03-டிச-202121:35:05 IST Report Abuse
Nagercoil Suresh பிரசாந்து வாங்கிய காசுக்குமேல கூவ ஆரம்பித்துவிட்டார், காங்கிரஸ் கட்சியிடம் இதே பிரசாந்த் அணுகிய பொழுது சில டெல்லி ஆளும் கட்சியிலுள்ள ஸ்லீப்பர் செல்கள் தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்துகொண்டு பலத்த எதிர்ப்பை தெரிவித்து பிரசாந்தை ஓடஓட விரட்டிவிட்டார்கள் இதற்கு ராகுலின் அறியாமையும் ஒரு காரணம், எதுவாக இருந்தாலும் கை ரிக்க்ஷா மாநில முதல்வர் மம்தாவின் கட்சி காங்கிரஸ் கட்சியின் தூசிக்கு சமம்...
Rate this:
Cancel
ஏகன் ஆதன் - கிண்ணிமங்கலம்,இந்தியா
03-டிச-202121:21:22 IST Report Abuse
ஏகன் ஆதன் மோடியின் பலம் ஊழல் அற்ற ஆட்சி மற்றும் ராகுல், இரண்டும் தொடர்ந்தாள் மீண்டும் அவரே ஆட்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X