பொது செய்தி

தமிழ்நாடு

அம்பேத்கர் சட்ட பல்கலை சிறப்பு வழக்கறிஞர் நியமனம்

Added : டிச 02, 2021
Share
Advertisement
புதுடில்லி:தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை கழகத்தின் சிறப்பு வழக்கறிஞராக, டில்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராம் சங்கர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அரசால் சட்ட படிப்புக்கு என பிரத்யேகமாக துவங்கப்பட்டது, அம்பேத்கர் அரசு சட்ட பல்கலை கழகம். சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலுார் மற்றும் சேலம் என எட்டு இடங்களில் உள்ள
 அம்பேத்கர் சட்ட பல்கலை சிறப்பு வழக்கறிஞர் நியமனம்

புதுடில்லி:தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை கழகத்தின் சிறப்பு வழக்கறிஞராக, டில்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராம் சங்கர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசால் சட்ட படிப்புக்கு என பிரத்யேகமாக துவங்கப்பட்டது, அம்பேத்கர் அரசு சட்ட பல்கலை கழகம். சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலுார் மற்றும் சேலம் என எட்டு இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் இதன் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்திய பார் கவுன்சில் மற்றும் பல்கலை கழக மானிய குழு ஆகியவற்றால் இந்த பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.இந்த பல்கலை தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக, தமிழகத்தை சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராம் சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் ராஜபாளையத்தை சேர்ந்தவர். 2012 முதல் டில்லியில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.சமீபத்தில் சட்டபடிப்பில், 'இந்தியாவில் எப்படி நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர்' என்ற தலைப்பின் கீழ்,தன் ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X