காற்று மாசை தடுக்க நடவடிக்கை : டில்லி அரசுக்கு 24 மணி நேர கெடு

Updated : டிச 04, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி:'காற்று மாசுபடுவதை தடுக்க டில்லி அரசு எந்த முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசை நிர்வகிக்க நாங்கள் யாரையாவது நியமிக்க வேண்டுமா? 'காற்று மாசை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க 24 மணி நேரம் அவகாசம் தரப்படுகிறது' என, டில்லி மாநில அரசை, உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து உள்ளது.கண்டனம்டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான
காற்று மாசு : டில்லி அரசு, 24 மணி நேர கெடு

புதுடில்லி:'காற்று மாசுபடுவதை தடுக்க டில்லி அரசு எந்த முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசை நிர்வகிக்க நாங்கள் யாரையாவது நியமிக்க வேண்டுமா? 'காற்று மாசை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க 24 மணி நேரம் அவகாசம் தரப்படுகிறது' என, டில்லி மாநில அரசை, உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து உள்ளது.


கண்டனம்


டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந்து உள்ளது. டில்லியில் காற்று மாசு படுமோசமான நிலையில் உள்ளது. இது தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு நான்கு வாரங்களாக விசாரித்து வருகிறது.
விசாரணையின்போது மத்திய மற்றும் டில்லி அரசுக்கு அமர்வு கடும் கண்டனம் தெரிவித்தது. டில்லி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியிடம் அமர்வு உத்தரவிட்டதாவது:நான்கு வாரங்களாக இந்த பிரச்னை தொடர்பாக இங்கு விவாதித்து வருகிறோம். இரண்டு தரப்புகளும் மாறி மாறி பல யோசனைகளை கூறியுள்ளன. பிரச்னைக்கு காரணம் என, சிலவற்றை கூறியுள்ளனர். அனைவரது நேரமும் வீணானதே தவிர, எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது. அப்படி என்றால் காற்று மாசு மோசமடைந்து வருவது ஏன்?அலுவலகங்கள் மூடப்பட்டு வீட்டில் இருந்து வேலை செய்ய உத்தரவிட்டுள்ளீர்கள். ஆனால் பள்ளிகளைத் திறந்துள்ளீர்கள். இது என்ன மாதிரியான யோசனை. டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்தும், வாகனங்களில் இருந்தும் வெளியேறும் மாசை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அவகாசம்

அதிகாரிகள் என்னதான் செய்கிறீர்கள். ஏன் யோசனையே செய்ய மாட்டேன் என்கிறீர்கள். காற்று மாசை கண்காணிக்க 20 - 30 பேர் உடைய குழுக்கள் அமைத்து என்ன பயன். அதிகாரிகளுக்கு அனைத்தையும் நாங்களே சொல்லித் தர வேண்டுமா?டில்லி அரசு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
அரசு நிர்வாகத்தை கவனிக்க யாரையாவது நாங்கள் நியமிக்க வேண்டுமா. உங்களுக்கு 24 மணி நேரம் அவகாசம் தரப்படுகிறது. அதற்குள் காற்று மாசை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.
வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது. இதற்கிடையே மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு டில்லி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03-டிச-202122:22:36 IST Report Abuse
Natarajan Ramanathan காற்று மாசு குறையாவிட்டால் இந்த உச்ச நீதிமன்ற ..இதற்கும் இரண்டு மாதம் விடுமுறை கொடுப்பர்.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
03-டிச-202116:37:27 IST Report Abuse
Sivagiri இரவு மட்டும் 10-to-5- முழு ஊரடங்கு - போட்டால் சரியாகுமே . .
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
03-டிச-202114:28:22 IST Report Abuse
raja எங்க திருட்டு தில்லுமுல்லு கூட்டம் மாதிரி செய்யனும் கெஜ்ரி....ஆட்சியில இல்லைன்னா ஸ்டெர்லிட் ஆலையால் மாசு மக்கள் பாதிக்க படறாங்கன்னு சாவுறாங்கன்னு பிச்சை போட்டவனுவோலை விட்டு கிளர்ச்சி புறச்சின்னு பண்ணனும்.... ஆட்சியில இருந்தா அந்த நிறுவனத்திடம் இருந்து இனிப்பு பெட்டியை வாங்கிகிட்டு பையன் சின்டிகேட்டு உறுப்பினரா இருக்கிற பல்கலைக்கழகத்திலிருந்து பொறியியல் வல்லுநர்?களை விட்டு அந்த ஆலையால் மாசு ஏற்பட வில்லைன்னு சான்று தரணும்.... பொழைக்க தெரியாத ஆள் இருக்கியே... என்னத்தான் ஐ ஐ டீ யில படிச்சியோ..ஐ ஏ எஸ் ஆநீயோ . போ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X