அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ் புத்தாண்டு: பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

Updated : டிச 04, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் நேற்றைய அறிக்கை: தமிழகத்தில் பல நுாற்றாண்டுகளாக, சித்திரை மாத பிறப்பு தான், தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த மரபை முற்றிலும் சீர்குலைக்கும் விதமாக, தை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு எனக்கூறி, தி.மு.க., ஆட்சியில், 2008ல் சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும், தமிழக மக்கள், சித்திரை முதல் தேதியையே, தமிழ்
தமிழ் புத்தாண்டு , பன்னீர்  செல்வம் வலியுறுத்தல்

சென்னை: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் நேற்றைய அறிக்கை:
தமிழகத்தில் பல நுாற்றாண்டுகளாக, சித்திரை மாத பிறப்பு தான், தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த மரபை முற்றிலும் சீர்குலைக்கும் விதமாக, தை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு எனக்கூறி, தி.மு.க., ஆட்சியில், 2008ல் சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும், தமிழக மக்கள், சித்திரை முதல் தேதியையே, தமிழ் புத்தாண்டாக கொண்டாடினர். கடந்த 2011ல் ஜெயலலிதா முதல்வரான பின், மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்ற சட்டத்தை ரத்து செய்தார்.
தற்போது, 2022ம் ஆண்டு பொங்கல் பரிசு பை முகப்பில், 'இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்' என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதைக்கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பொங்கல் திருநாளையொட்டி, கடந்த ஆண்டை போல, ரொக்கமாக 2,500 ரூபாய் அரசு வழங்கும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், இதுபோன்ற வெத்து அறிவிப்பு, மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.இதுவும் ஒருவிதமான கருத்து திணிப்பு. எந்த பண்டிகையை, எப்போது கொண்டாடுவது என்பதை, மக்களின் விருப்பத்திற்கு விடுவதே நல்லது. எனவே, மக்களின் உணர்ச்சிகளுக்கு, கருத்துக்களுக்கு மதிப்பளித்து, சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்ற நடைமுறை தொடர, முதல்வர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
03-டிச-202114:33:13 IST Report Abuse
raja தின்டுக்கல்லில் நிறைய க்ரிப்டோ கிறிஸ்டியனுவோ இருக்கானுவோ....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
03-டிச-202114:32:20 IST Report Abuse
raja பொய் பெயரில் வரும் மர்ம நபரே உங்களுக்கும் தமிழ் புத்தாண்டுக்கு என்ன சம்பந்தம்?
Rate this:
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
03-டிச-202113:51:22 IST Report Abuse
anbu ராமசாமி தனக்கு முட்டாள்கள் தான் வேண்டும் என்று சொன்னான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X