எக்ஸ்குளுசிவ் செய்தி

13க்கு பதிலாக 71 டி.எம்.சி., திறப்பு கடலுக்கு போகும் காவிரி நீர்!

Updated : டிச 03, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: நவம்பரில் தர வேண்டிய13 டி.எம்.சி.,க்கு பதிலாக,71 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா தந்துள்ளது. தேக்கி வைக்க வழியின்றி, உபரி நீராக கடலுக்குள் அனுப்பப்படுகிறது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி.,காவிரி நீரை, கர்நாடகா அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.நீர் வழங்கும் தவணை காலம் ஒவ்வொரு ஆண்டும்
 13க்கு பதிலாக 71 டி.எம்.சி., திறப்பு கடலுக்கு போகும் காவிரி நீர்!

சென்னை: நவம்பரில் தர வேண்டிய13 டி.எம்.சி.,க்கு பதிலாக,71 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா தந்துள்ளது. தேக்கி வைக்க வழியின்றி, உபரி நீராக கடலுக்குள் அனுப்பப்படுகிறது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி.,காவிரி நீரை, கர்நாடகா அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.நீர் வழங்கும் தவணை காலம் ஒவ்வொரு ஆண்டும் ஜூனில் துவங்குகிறது. அதன்படி, ஜூனில் 9.19 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்கி இருக்க வேண்டும். அணைகளில் போதிய நீர் இல்லை என்று கூறி, 7.69 டி.எம்.சி., நீர் மட்டுமே திறக்கப்பட்டது.

ஜூலையில் 31.2 டி.எம்.சி.,க்கு பதிலாக 27.9 டி.எம்.சி.,யும்; ஆகஸ்டில் 45.9 டி.எம்.சி.,க்கு பதிலாக 22.6 டி.எம்.சி.,யும்; செப்டம்பரில் 36.7 டி.எம்.சி.,க்கு பதிலாக 33.1 டி.எம்.சி.,யும் தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டது.கர்நாடகா அணைகள் நிரம்பிய நிலையில், அக்டோபரில் 20.2 டி.எம்.சி.,க்கு பதிலாக 48.2; நவம்பரில் 13.7 டி.எம்.சி.,க்கு பதிலாக, அதிகபட்சமாக 71.5 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டு உள்ளது.நடப்பு நீர் வழங்கும் காலத்தில் நவம்பர் வரை 157 டி.எம்.சி., நீரை திறந்திருக்க வேண்டும்.

கர்நாடக அணைகள் நிரம்பியதால், அதிகளவில் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், 211 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. ஆண்டு ஒதுக்கீட்டை விட இது, 54 டி.எம்.சி., அதிகம். கர்நாடகாவில் திறக்கப்பட்டுள்ள நீரை சேமிப்பதற்கு, காவிரியில் மேட்டூர் அணையை தவிர போதிய கட்டமைப்புகள் இல்லை. எனவே, தற்போது கிடைத்து வரும் நீர் முழுதும் காவிரி, கொள்ளிடம் ஆறுகள் வழியாகஉபரியாக கடலுக்கு செல்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundararaman Iyer - Bangalore,யூ.எஸ்.ஏ
03-டிச-202122:05:47 IST Report Abuse
Sundararaman Iyer Criminal wastage of precious resources. Irresponsible Tamilians..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X