அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., தேர்தல்: சசிகலா புது 'குண்டு'

Updated : டிச 04, 2021 | Added : டிச 02, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை :'தொண்டர்களின் நம்பிக்கை வீண்போகாது. விரைவில், அ.தி.மு.க.,வின் நிலை மாறும்; தலை நிமிரும், இது உறுதி' என, சசிகலா தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க.,வில் உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலா விடுத்துள்ள அறிக்கை: அ.தி.மு.க.,வின் இன்றைய நிலையை பார்க்கும் போது, இதற்காகவா நம் இருபெரும் தலைவர்களும், தங்கள் ரத்தத்தை வியர்வையாக்கி, ஓயாது உழைத்து கட்சியை
ADMK, Sasikala, சசிகலா

சென்னை :'தொண்டர்களின் நம்பிக்கை வீண்போகாது. விரைவில், அ.தி.மு.க.,வின் நிலை மாறும்; தலை நிமிரும், இது உறுதி' என, சசிகலா தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.,வில் உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலா விடுத்துள்ள அறிக்கை: அ.தி.மு.க.,வின் இன்றைய நிலையை பார்க்கும் போது, இதற்காகவா நம் இருபெரும் தலைவர்களும், தங்கள் ரத்தத்தை வியர்வையாக்கி, ஓயாது உழைத்து கட்சியை காப்பாற்றினர் என்று நினைக்கும் போது, ஒவ்வொரு தொண்டனின் நெஞ்சமும் குமுறுகிறது.
என்றைக்கு தனி மனித விருப்பு, வெறுப்புகளுக்கு இயக்கம் பயன்பட்டதோ, அன்றிலிருந்து அதன் மதிப்பு குறைந்தது; தன் தொண்டர்களையும் மறந்தது.

நிர்வாகிகள், தொண்டர்கள், கட்சி மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து, நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உங்கள் நம்பிக்கை கண்டிப்பாக வீண் போகாது.ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும், விருப்பு, வெறுப்புகளுக்காகவும் செயல்பட்டு கொண்டிருக்கின்ற, நம் கட்சியை சரி செய்து, மீண்டும் அதை தொண்டர்களுக்கான இயக்கமாக, விரைவில் மாற்றிக் காட்டுவோம்.

அனைத்து தொண்டர்களும் கவலையின்றி இருங்கள். எவ்வித காரணமும் இல்லாமல் உதாசீனம் செய்யப் பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், தாங்களாக ஒதுங்கி செயல்படாமல் இருப்பவர்கள் அனைவரும் சிறிது காலம் பொறுத்திருங்கள்.மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள். விரைவில், அ.தி.மு.க., நிலை மாறும்; தலை நிமிரும்; இது உறுதி.எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும், அவற்றை தகர்த்தெறிந்து, என் உயிர்மூச்சு உள்ளவரை கட்சியை காத்து, தொண்டர்களின் இயக்கமாக மாற்றும் வரை நான் ஓய்ந்து விட மாட்டேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
10-டிச-202122:31:49 IST Report Abuse
DARMHAR இவள் சசிகலா அல்ல ....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
09-டிச-202112:39:16 IST Report Abuse
Bhaskaran Kayil kaasu irunthaal tamilnaattil ethuku vendumaanaalum aasaipadalaam poliruku
Rate this:
Cancel
Muthuraj Richard - Coimbatore,இந்தியா
05-டிச-202117:16:39 IST Report Abuse
Muthuraj Richard சுய நலத்திற்காக எம் ஜி ஆர் என்ற ஒரு தனிநபரை ஏகோபித்த தில்லுமுல்லு செய்து மக்களை கண்மூடித்தனமாக நம்பவைத்த சாதனை இன்னும் தொடர்கிறது, எம் ஜி ஆரின் நிஜ முகத்தை அறிந்த சில மூத்த பத்திரிக்கையாளர்கள் இன்னமும் இருக்கிறார்கள் அவர்களில் சிலர் எம் ஜி ஆர் குறித்தும் அண்ணா தி மு க உருவாவதற்கான அடிப்படை நிஜ காரணத்தையும் குறித்து வெளியிடும் உண்மைகள் மெதுவாக மக்களை சென்றடைய தொடங்கியிருக்கிறது, கேவலமான காரணங்களுக்காக கேவலமான யுக்தியை கையாண்டு மக்களை கண்மூடித்தனமாக நம்ப செய்த கொடுமை இன்னும் வழி வழியாக ( ஜெயா, சசி,பாடி, ஓ பி எஸ், கரண் அண்ட் கோ ) என தொடர்கிறது, இது பாமரர்களுக்கு புரியாத அரசியல், மக்களுக்கு எத்தனை நஷ்டங்கள் தெரியமா ? எற தாழ முப்பது ஆண்டுகள் இவர்கள் ஆட்சியில் மக்களுக்கு கிடைத்தது எல்லாம் வெறும் வாய்வழி திட்டங்கள் தான், கொள்ளைகளுக்கு அளவே இல்லை, அம்மா என்ற உண்மையை தகுதி குறைத்து போலியாக சொல்வழக்காடியவர்கள் இக்கட்சியின் அபிமானிகள் தான், குற்றவாளிகளுக்கு தங்கள் பிழைப்புக்காக சாமரம் வீசும் கூட்டம், இதனால் அனைத்து விதத்திலும் பாதிக்கப்படுவது பாமர மக்கள்தான்,vaalga தமிழகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X