பொது செய்தி

இந்தியா

ஒமைக்ரான் அச்சுறுத்தல்; அதிகரிக்கப்படும் தடுப்பு மருந்துகள் எண்ணிக்கை

Updated : டிச 03, 2021 | Added : டிச 02, 2021
Share
Advertisement
டில்லி: ஓமைக்ரான் அச்சுறுத்தல் இந்தியாவில் மேலோங்கியதால் தடுப்பு மருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓமைக்ரான் அறிகுறிகளுடன் தற்போது கர்நாடகாவில் இருவர் மருத்துவ சுகாதாரத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்தியாவில் ஓமைக்ரான் பரவல் குறித்த யாரும் அச்சம் கொள்ள

டில்லி: ஓமைக்ரான் அச்சுறுத்தல் இந்தியாவில் மேலோங்கியதால் தடுப்பு மருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓமைக்ரான் அறிகுறிகளுடன் தற்போது கர்நாடகாவில் இருவர் மருத்துவ சுகாதாரத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



latest tamil news



இந்நிலையில் இந்தியாவில் ஓமைக்ரான் பரவல் குறித்த யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அனைவரும் சமூக விலகலை பின்பற்றவும் பல்வேறு மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக மத்திய அரசின் நிதி ஆயோக் தலைவர் டாக்டர் விகே பால் தற்போது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். மத்திய மோடி அரசு இந்திய குடிமக்களுக்கு 2 டோஸ் தடுப்பு மருந்தை முழுவதுமாக அளிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர் குறிப்பாக இளைஞர்களுக்கு தடுப்பு மருந்தை கொண்டு சேர்க்க முனைப்பு காட்டுவதாகக் கூறியுள்ளார்.
தற்போது உலகின் பல நாடுகளில் ஓமைக்ரான் தாக்கம் தொடர்பான அச்சத்தை அடுத்து இந்திய இளைஞர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பு மருந்தை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டுமென்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மூன்றாவது பூஸ்டர் டோஸ் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு பதிலளித்த பால், ஓமைக்ரான் தீவிரத் தன்மை குறித்து தற்போது மத்திய விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாகவும் அதன் தீவிரத்தைப் பொருத்து பூஸ்டர் டோஸ் குறித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இரண்டு டோஸ் தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ள யாரும் தாமதம் காட்டவேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.


latest tamil news



இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் நாடு முழுவதும் 125 கோடி தடுப்பு மருந்துகள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.நாட்டில் 84 சதவீத இளைஞர்களுக்கு முதல் டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு விட்டதாகவும் 49 சதவீத மக்களுக்கு இரண்டாம் டோஸ் முழுவதுமாக செலுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X