வயல், வீடுகளை சூழ்ந்த தண்ணீர்

Added : டிச 02, 2021 | |
Advertisement
ராமநாதபுரம்: தொருவளூரில் கண்மாய் நிரம்பி, வைகை ஆற்றுத்தண்ணீரால் வயல்வெளிகள் நெற்பயிர் மூழ்கியுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வருவதால்அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரத்திற்கு கடந்த சிலநாட்களாக வைகை ஆற்றுதண்ணீர்3ஆயிரம் முதல் 5ஆயிரம் கனஅடி வரை வருகிறது. பெரியகண்மாய் 5அடி உள்ளதால் நயினார்கோயில் மதகுபகுதியிலிருந்து திருப்பி விடப்பட்ட

ராமநாதபுரம்: தொருவளூரில் கண்மாய் நிரம்பி, வைகை ஆற்றுத்தண்ணீரால் வயல்வெளிகள் நெற்பயிர் மூழ்கியுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வருவதால்அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரத்திற்கு கடந்த சிலநாட்களாக வைகை ஆற்றுதண்ணீர்3ஆயிரம் முதல் 5ஆயிரம் கனஅடி வரை வருகிறது. பெரியகண்மாய் 5அடி உள்ளதால் நயினார்கோயில் மதகுபகுதியிலிருந்து திருப்பி விடப்பட்ட வைகை ஆறு உபநீர் தொருவளூரில் கண்மாய் நிரம்பி கடலுக்கு செல்லும் வழியில் கரை சேதத்தால், வயல்களில் தேங்கி வெள்ளக்காடாகியுள்ளன.

தொடர்ந்து வைகைஆற்று தண்ணீர் வருவதால் சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தொருவளூரில்விளைநிலங்கள் அருகேயுள்ள வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மண்சுவர் வீடு சேதமடைய வாய்ப்புள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் பார்வையிட்டு, கரையை செப்பனிட்டும், தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X