
ஓடை புறம்போக்கில் வசிக்கும் மக்கள், வீடில்லாத ஏழை, எளியோர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள், உள்ளாட்சி துாய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு, தகுதி அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.அவிநாசி, சேவூர் ரோடு, சூளையில், 448 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. இதில், 203 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 75க்கும் குறைவானவர்களே, இதுவரை தங்களின் பங்களிப்பு தொகையை செலுத்தியுள்ளனர்.
அவிநாசி, நல்லாற்றை ஒட்டி வசித்து வரும், 106 குடும்பங்களுக்கு, வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன; இதில், 20க்கும் குறைவானவர்கள் மட்டுமே, வீடு பெற முன்வந்து, அதற்குரிய தொகையை செலுத்தியுள்ளனர்; எஞ்சியவர்கள் தொகை செலுத்தவில்லை.ஆற்றோர 'அரசியல்'நல்லாறு ஓடை பகுதியில், 300க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும், என, அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வீடுகளை காலி செய்து, வேறு இடம் சென்று விட்டால், ஓட்டு வங்கி பாதிக்கும், என்ற அச்சம் அரசியல் கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ளது.

ஒரு வார்டு வேட்பாளரின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கிற ஆற்றோர மக்களின் ஓட்டுகளை இழக்க விரும்பாததால், சில அரசியல் கட்சியினர், மக்களை குழப்பி, இடம் பெயர்வதை தடுத்து வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.வாய்ப்பு பறிபோகும்நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:அடுக்குமாடி குடியிருப்புக்கு, 2,000 பயனாளிகளை கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார். அந்த வகையில், வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
வீடு ஒதுக்கியும், அதற்குரிய தொகையை செலுத்தாமல் உள்ளவர்களுக்கு, விளக்கம் கேட்டு, 3 மாத காலம் அவகாசம் வழங்கி 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.அதற்குள் அவர்கள் வீடுகளை பெற முன்வராத பட்சத்தில், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வீடுகள், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பிற விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டு விடும். 'தற்போது வீடு வேண்டாம்' எனக்கூறுவோர். மீண்டும் வீடு கேட்டு விண்ணப்பிக்கும் பட்சத்தில், வேறு இடத்தில், வீடுகள் காலியாக இருந்தால் அங்கு ஒதுக்கப்படும்; மாறாக, அவர்கள் விரும்பும் இடம் கிடைக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE