வழிமறித்த ஒற்றை யானை ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

Added : டிச 03, 2021
Advertisement
அந்தியூர்:அந்தியூர் அருகே வனப் பாதையில் யானை மறித்த நிலையில், 108 அவசரகால ஆம்புலன்சில், பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா மலைப் பகுதி ஓசூரைச் சேர்ந்தவர் நந்தினி, 25. இவரது குடும்பத்தார் கூலி வேலை செய்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியான நந்தினிக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டு, ஓசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
 வழிமறித்த ஒற்றை யானை ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

அந்தியூர்:அந்தியூர் அருகே வனப் பாதையில் யானை மறித்த நிலையில், 108 அவசரகால ஆம்புலன்சில், பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா மலைப் பகுதி ஓசூரைச் சேர்ந்தவர் நந்தினி, 25. இவரது குடும்பத்தார் கூலி வேலை செய்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியான நந்தினிக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டு, ஓசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
மேல் சிகிச்சைக்காக இரவு 11:30 மணிக்கு, 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கிளம்பினர். மணியாச்சிப்பள்ளம்வனப் பாதையில், இரவு 11:50 மணிக்கு ஒற்றை காட்டு யானை சாலையில் நின்று, ஆம்புலன்ஸ் வெளிச்சத்தை கவனித்த படி விலகாமல் நின்றது.அப்பெண்ணுக்கு பிரசவவலி அதிகமாகி ஆபத்தான நிலை ஏற்பட்டதால், மருத்துவ உதவியாளர் முதலுதவியை துவங்கினார். அதற்குள் யானை காட்டுக்குள் சென்று விட்டது.

ஆயினும், மருத்துவ உதவியாளர் உதவியால், இரவு 12:12 மணிக்கு அப்பெண், பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.உடனடியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து வந்து தொடர் சிகிச்சை வழங்கினர். தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X