பொது செய்தி

தமிழ்நாடு

14வது கோவை விழா துவக்கம்! ஜன., 2 - 9 வரை ஒரு வாரம் கொண்டாட்டம்

Updated : டிச 03, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை: கோவை விழாவின், 14வது பதிப்பு வாலாங்குளக்கரையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. ஜன.,2 முதல் 9 வரை விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் ஆகியோர், விழாவின் சின்னம் மற்றும் போஸ்டரை வெளியிட்டு, விழாவை தொடங்கி வைத்தனர்.யங் இந்தியன்ஸ் அமைப்பின் ஜெயபிரசாந்த் வரவேற்று பேசுகையில், ''கோவை மக்களுடன், 150க்கும் மேற்பட்ட அமைப்புகள்,

கோவை: கோவை விழாவின், 14வது பதிப்பு வாலாங்குளக்கரையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. ஜன.,2 முதல் 9 வரை விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் ஆகியோர், விழாவின் சின்னம் மற்றும் போஸ்டரை வெளியிட்டு, விழாவை தொடங்கி வைத்தனர்.

யங் இந்தியன்ஸ் அமைப்பின் ஜெயபிரசாந்த் வரவேற்று பேசுகையில், ''கோவை மக்களுடன், 150க்கும் மேற்பட்ட அமைப்புகள், அரசு துறைகளுடன் இணைந்து இந்த விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முதல் முறையாக, வழக்கமான இடங்களை விட்டு, புதிய இடத்தில் இயற்கையுடன் இணைந்து இந்த விழா நடத்தப்படுகிறது. கொண்டாட்டம் மட்டுமின்றி, புதிய விஷயங்களை அறிந்து கொள்வதற்கும் இந்த விழா பயன்படும்,'' என்றார்.



latest tamil news



'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் முன்னாள் தலைவர் பிரசன்னா கிருஷ்ணா பேசுகையில், ''கோவை மக்களுக்காக, கோவை மக்களால் இந்த விழா நடத்தப்படுகிறது. ''வெவ்வேறு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன,'' என்றார்.

கோவை விழா தலைவர் அஸ்வின் மனோகர், இந்தாண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளை பற்றி விளக்கினார். இணை தலைவர் டாக்டர் செந்தில் குமார், யங் இந்தியன்ஸ் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


latest tamil news



சி.ஐ.ஐ., அமைப்பின் முன்னாள் தமிழக தலைவர் நந்தினி ரங்கசாமி, யங் இந்தியன்ஸ் அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் சங்கர் வாணவராயர், சி.ஐ.ஐ., கோவை பிராந்திய தலைவர் அர்ஜூன் பிரகாஷ், கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு, இந்திய தொழில் வர்த்தக சபை செயலாளர் நடராஜன், 'சீமா' தலைவர் கார்த்திக், ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் மாருதி உள்ளிட்டோர் பேசினர்.


கலக்கல் 'லேசர் ஷோ'காண தயாரா இருங்க!


கோவை விழா முன்னிட்டு 'நேற்று இன்று நாளை' என்ற கருப்பொருளுடன், 'லேசர் ஷோ' நிகழ்ச்சிக்கு வாலாங்குளத்தின் கரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைகளையும், கலைஞர்களையும் கொண்டாடும் வகையில் ஓவியச்சந்தை நடத்தப்படுகிறது. குழந்தைகளுக்கான கலைப்பட்டறைகளுடன் கலைத்தெரு நிகழ்ச்சியும் நடத்த முடிவாகியுள்ளது.

மக்களின் ஆரோக்கியத்தை கொண்டாடும் வகையில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது.மெய்நிகர் மற்றும் நேரடி சமையல் போட்டி, 'செப்ஸ் பிளேட்' என்ற பெயரில் நடக்கிறது. எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டு புதையல் வேட்டை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராலிம்பிக்ஸ் விழாவும் நடக்கவுள்ளது. 'விவசாயம் பண்ணலாம் வாங்க' என்ற தலைப்பில்? வேளாண் பல்கலை வல்லுனர்கள் குழுவினர் ஆலோசனை வழங்க உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
03-டிச-202109:30:58 IST Report Abuse
Bala Murugan ஜனவரி இரண்டு முதல் ஒன்பது வரை என்றால் ஒரு வாரம் கொண்டாட்டம் இல்லை எட்டு நாட்கள் கொண்டாட்டம்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
03-டிச-202108:38:47 IST Report Abuse
Bhaskaran சென்னையில் மயிலாப்பூர் திருவிழா திருவல்லிக்கேணி திருவிழா போன்றவை தனியார் நிறுவனம் அப்பகுதி மக்களும் சேர்ந்து கொண்டாடினர் கனியாக்கா அதை சென்னை சங்கமமாக அரசு சார்பில் நடத்தி காசுபார்த்ததும் உலகம் அறிந்ததே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X