உலகின் செலவு மிக்க நகரம் முதலிடத்தில் இஸ்ரேலின் டெல் அவிவ்

Updated : டிச 03, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
டெல் அவிவ் : இஸ்ரேலின் கடற்கரை நகரமான டெல் அவிவ், மக்களின் அன்றாட வாழ்விற்கு அதிகம் செலவிட வேண்டிய நகரமாக மாறியுள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின், 'எக்கனாமிஸ்ட்' என்ற பத்திரிகையின் பொருளாதார புலனாய்வு பிரிவு ஆய்வு அறிக்கையை சமீபத்தில் சமர்ப்பித்தது. அதன் விபரம்:இஸ்ரேலின் கடற்கரை நகரமான டெல் அவிவ், வாழ்வதற்கு மிகவும் அதிகமாக
உலகின் செலவு , நகரம் ,இஸ்ரேல் , டெல் அவிவ்


டெல் அவிவ் : இஸ்ரேலின் கடற்கரை நகரமான டெல் அவிவ், மக்களின் அன்றாட வாழ்விற்கு அதிகம் செலவிட வேண்டிய நகரமாக மாறியுள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின், 'எக்கனாமிஸ்ட்' என்ற பத்திரிகையின் பொருளாதார புலனாய்வு பிரிவு ஆய்வு அறிக்கையை சமீபத்தில் சமர்ப்பித்தது.

அதன் விபரம்:இஸ்ரேலின் கடற்கரை நகரமான டெல் அவிவ், வாழ்வதற்கு மிகவும் அதிகமாக செலவிட வேண்டிய நகரமாக மாறி வருகிறது. இந்த பட்டியலில் உலக அளவில் ஐந்தாவது இடத்தில் இருந்த டெல் அவிவ், தற்போது முதல் இடத்துக்கு வந்துள்ளது. பிரான்சின் பாரிஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களை விட டெல் அவிவில் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.


latest tamil news


அமெரிக்க டாலருக்கு எதிரான இஸ்ரேலின் கரன்சியான ஷெகல் உயர்ந்து வருவதே இந்த விலை உயர்வுக்கு காரணம்.மளிகை மற்றும் போக்குவரத்து செலவுகள் இந்த நகரில் மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. இங்கு வசிப்பவர்கள் வீட்டு வாடகை செலுத்தி எளிமையான வாழ்க்கை வாழ்வதே கடும் சிரமமாக மாறி வருகிறது. இஸ்ரேலின் பொருளாதார மற்றும் கலாசார மையமான டெல் அவிவ் மாறி வருவதால், மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இங்கு உள்ளன.அழகிய நீண்ட கடற்கரை, உலக தரம் வாய்ந்த உணவகங்கள் இங்கு உள்ளன.

இதனால், இந்த நகரில் வசிப்பதை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். ஷெகலின் மதிப்பு உயர்ந்து வருவதால், வெளிநாட்டு முதலீடும் இஸ்ரேலில் அதிகரிக்க துவங்கி உள்ளன. இதன் காரணமாக அதிநவீன நகரமாக டெல் அவிவ் மாறி உள்ளது.டெல் அவிவ் நகரில் வீடு வாங்குவது, இஸ்ரேல் மக்களால் முடியாத காரியமாகி வருகிறது. இங்கு, வீட்டின் விலை சராசரியாக 9 கோடி ரூபாய் வரை உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-டிச-202107:41:11 IST Report Abuse
Kasimani Baskaran இங்கு கூட வீட்டு விலை விண்ணை முட்டும் அளவில்தான் உள்ளது. 99 வருட லீசில் உள்ள வீட்டு வசதி வாரியம் விற்கும் ஐந்தரை வீடு கூட இரண்டரை கோடி... தரை வீடு என்றால் 15 கோடிக்கு மேல் சென்று விடும்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
03-டிச-202104:15:31 IST Report Abuse
மலரின் மகள் அதோடு உலகின் அதிக அச்சுறுத்தலுக்கும், அதீத பாதுக்காப்பு மிக்கதுமான நகராக இருக்கிறது. இந்த நகருடன் நேரடி தொடர்பை சென்னை ஏற்படுத்தி கொள்வது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். குறிப்பாக விவசாயம், சைபர் செக்யூரிட்டி, ராணுவத்தலாட்டம்,லேசர் விஞ்ஞானம் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தலாம். திண்டுக்கல்லில் வேளாண் ஆராய்ச்சி இஸ்ரேலுடன் இணைந்து செய்யப்படுகிறது.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03-டிச-202103:07:03 IST Report Abuse
Natarajan Ramanathan என்னவிலை கொடுத்தாலும் பாரீசுக்கு அடுத்து மிக அழகிய நகரம் டெல்அவிவ் என்பது உண்மைதான். அவசியம் ஒரு முறையாவது காணவேண்டிய நகரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X