பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: எல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.. மக்களே உஷார்!

Added : டிச 03, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ந.செந்தமிழ் வாணி, காஞ்சிபுரத்திலிருந்து எழுதுகிறார்: 'இரண்டு 'டோஸ்' கொரோனா தடுப்பூசி போட்டோருக்கு மட்டுமே, 'டாஸ்மாக்' கடையில் மது விற்பனை செய்யப்படும்' என, சமீபத்தில் அறிவித்துள்ளது அரசு. மக்கள் கூடும் அனைத்து பொது வெளியிலும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டோருக்கு மட்டும் தான்
Vaccine, Corona Vaccine, Covid Vaccine, tasmac


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


ந.செந்தமிழ் வாணி, காஞ்சிபுரத்திலிருந்து எழுதுகிறார்: 'இரண்டு 'டோஸ்' கொரோனா தடுப்பூசி போட்டோருக்கு மட்டுமே, 'டாஸ்மாக்' கடையில் மது விற்பனை செய்யப்படும்' என, சமீபத்தில் அறிவித்துள்ளது அரசு. மக்கள் கூடும் அனைத்து பொது வெளியிலும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டோருக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும் என்ற ஆணை ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஆனால், அது வெறும் ஏட்டளவிலும், பேச்சளவிலும் மட்டுமே இருக்கிறது.

கடந்த ஞாயிறு, சென்னையில் பிரபல, 'ஷாப்பிங் மால்' ஒன்றுக்கு சென்றிருந்தேன். உள்ளே வருவோரிடம், ஏதோ பேருக்கு வெப்ப பரிசோதனை செய்து, 'இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறீர்களா?' என்று சம்பிரதாயமாக கேட்க, 'போட்டாச்சு...' என்ற ஒற்றை வார்த்தையில் பதிலளித்து, வளாகத்தினுள் சென்றனர், மக்கள். இவர்களில் எத்தனை பேர் உண்மையிலே தடுப்பூசி போட்டிருப்பர் என்று தெரியவில்லை. அங்கிருந்தவரிடம் இதுபற்றி கேட்டதற்கு, 'எல்லாம் ஒரு நம்பிக்கை தான்...' என்று மழுப்பலாக பதில் கூறினார். ஆதாரத்தை காட்ட சொன்னால், அப்போது தெரியும் உண்மை நிலவரம்.


latest tamil news


ஆனால், அப்படி சொல்ல மாட்டார்கள். ஏனெனில், தங்கள் வியாபாரம் படுத்து விடுமே... அதனால், அரசு ஆணையை ஏனோ தானோவென கடைப்பிடிப்பது கண்கூடாக தெரிந்தது. இதே நிலை தான், டாஸ்மாக் கடைகளிலும் நடக்கும். விதவிதமான பெயரில் கொரோனா வைரஸ் வீரியமிக்கதாக உருமாறி உருமாறி, எந்த மருந்துக்கும் கட்டுப்படாமல், நம்மை பயமுறுத்தி வருகிறது; மக்களும் ஆபத்தை உணராமல் அலட்சியமாக உள்ளனர்.

இரும்புக் கரம் கொண்டு, நோய் தொற்றை முறியடிக்க சபதம் எடுக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். காலம் கடத்தினால் 'ஒமைக்ரான்' தன் வேலையை காட்டி விடும். நாளுக்கு ஒரு அறிவிப்பு, பொழுதொரு ஆணை என, அரசு அறிவித்தபடி தான் இருக்கும். அரசு சொல்லி விட்டதாலே தடுப்பூசி போட்ட பின் தான் டாஸ்மாக்குக்கு போக போகின்றனரா அல்லது ஆதாரத்தை காட்ட சொல்லி கேட்க போகின்றனரா? எல்லாம் வெறும் கண்துடைப்பு தான். மக்களே நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்!

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ananda Ayyappan Jaguva Vasudevan PhD - Durham, NC,யூ.எஸ்.ஏ
03-டிச-202121:13:48 IST Report Abuse
Ananda Ayyappan Jaguva Vasudevan PhD டாஸ்மாக் ல மட்டும் தான் கூட்டம், தொற்று, COVID பரவல், கட்டுப்பாடுகள் என்று வினவுவது, வேடிக்கையாக உள்ளது. மொத்தத்தில், இது மக்கள் அனைவருக்கும் பொருந்தும். காலம் மிக மிக குறைவு. OMICRON is already there in most of the countries, including India.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
03-டிச-202116:58:25 IST Report Abuse
DVRR ரெண்டு தடுப்பூசி போட்டிருந்தால் தான் டாஸ்மாக் சரக்கு ???யாருப்பா இந்த மாதிரி கோணங்கித்தனமாக யோசிக்கிறது ???அப்படின்னா மாலுக்கு போனால் கடைக்கு போனால் என்று எல்லாவற்றிக்கும் இரண்டு தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் தான் என்று இருக்கவேண்டும்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
03-டிச-202113:15:31 IST Report Abuse
r.sundaram மக்களுக்கு சுய புத்தி வேண்டும். இல்லாவிட்டால் என்ன செய்வது. ஹெல்மட் போட சொல்கிறது, முக கவசம் போட சொல்கிறது, வேறு என்னதான் அரசு செய்ய முடியும். கட்டிக்கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த புத்தியும் அதிக நாட்கள் கூட வராது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X