அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கூட்டணி தொடரும்: அண்ணாமலை அறிவிப்பு

Added : டிச 03, 2021 | கருத்துகள் (64)
Share
Advertisement
அன்னுார் : 'அ.தி.மு.க.,வுடன் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும் கொள்கை அடிப்படையில் ஒன்றாக உள்ளோம். கூட்டணி தொடரும்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தி.மு.க., அரசு திட்டமிட்டு அ.தி.மு.க.,-- பா.ஜ., நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்ய முயற்சிக்கிறது, சமீபத்தில் பா.ஜ.,வை சேர்ந்த அகோரம் என்பவரை கைது செய்ய, 250 போலீசாரை
ADMK, BJP, Annamalai

அன்னுார் : 'அ.தி.மு.க.,வுடன் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும் கொள்கை அடிப்படையில் ஒன்றாக உள்ளோம். கூட்டணி தொடரும்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தி.மு.க., அரசு திட்டமிட்டு அ.தி.மு.க.,-- பா.ஜ., நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்ய முயற்சிக்கிறது, சமீபத்தில் பா.ஜ.,வை சேர்ந்த அகோரம் என்பவரை கைது செய்ய, 250 போலீசாரை அனுப்பி மிரட்டல் விடுத்தது.

குற்றச்சாட்டுகளை கண்டு தி.மு.க., அஞ்சுகிறது. தேர்தல் அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கூறி விட்டு, தற்போது தி.மு.க., ஏமாற்றுகிறது. பொய் சொல்லி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த தி.மு.க., வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது.


latest tamil news



வேளாண் சட்டங்கள் குறித்து காங்., உள்ளிட்ட சில கட்சிகள் தவறாக பிரசாரம் செய்து, விவசாயிகளை நம்ப வைத்து விட்டன. ஒரு காலம் வரும். அப்போது, 'வேளாண் சட்டம் வேண்டும்' என, விவசாயிகள் கேட்பார்கள்.

அ.தி.மு.க.,வுடன் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும் கொள்கை அடிப்படையில் ஒன்றாக உள்ளோம். கூட்டணி தொடரும். மேற்கு வங்கத்தில் மம்தா அரசு, பா.ஜ., தொண்டர்களை கொன்று வருகிறது. கேரளாவில் 266 பா.ஜ.,வினர் கம்யூனிஸ்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
03-டிச-202117:33:27 IST Report Abuse
Easwar Kamal மோடி இருக்கிற வரை நீங்க எல்லா ஆடுங்க. ஆனால் இன்னும் ஒரு பத்து ஆண்டுகளுக்கு உங்களுக்கு தமிழ்நாட்டில் அதிமுக உடன் ஒட்டி கொண்டால் ஏதாவது கிடய்க்கும். அதிலும் அண்ணாமலை போன்ற வெது வெட்டுக்கள் இருக்கிற வரை தமிழ்நாட்டில் வைப்பே இல்லை ராஜா.
Rate this:
Cancel
Sadiq Batcha - Tiruchi,இந்தியா
03-டிச-202117:01:47 IST Report Abuse
Sadiq Batcha நம்ம எதிர்கால தலைவர் இன்பநிதி கால்தூசிக்கு சமமா இந்த அண்ணாமலை? அவருக்கு என்ன பேக் கிரவுண்ட் இருக்கு ? இதே நம்ம இன்பநிதிக்கு உதயா நிதி என்ற ஒப்பற்ற திரைப்பட நடிகரின் மகன் , சுடாலின் என்கிற சிறப்பான முன்னாள் சின்னத்திரை நடிகரின் பேரன், பார்போற்றும் உத்தமர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன், ஆகச்சிறந்த மோலகலைஞர் முத்துவேலர் எள்ளுப்பேரன் என்ற பெரும் வரலாறே உள்ளது
Rate this:
Cancel
Ketheesh Waran - Bangalore,இந்தியா
03-டிச-202116:53:21 IST Report Abuse
Ketheesh Waran பா.ஜ.க., அ.தி.மு.க., கூட்டணி தொடந்தாலும் முறிந்தாலும் எதுவும் மாறப்போவதில்லை. இரண்டுமே தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X