சிறுபான்மையினரை மதிக்கிறோம்: பாக்., வெளியுறவுத்துறை விளக்கம்

Added : டிச 03, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
இஸ்லாமாபாத் : 'கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பில் மாடல் அழகி புகைப்படம் எடுத்துக் கொண்டது மிகவும் அரிதாக நடக்ககூடிய சம்பவம்' என, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.நம் நாட்டின் பஞ்சாபை ஒட்டியுள்ள பாக்.,கின் நரோவால் மாவட்டத்தின் கர்தார்பூரில், சீக்கிய மத நிறுவனரான குருநானக்கின் சமாதியான குருத்வாரா தர்பார் சாஹிப் உள்ளது. இது,
Pakistan, India, Gurdwara

இஸ்லாமாபாத் : 'கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பில் மாடல் அழகி புகைப்படம் எடுத்துக் கொண்டது மிகவும் அரிதாக நடக்ககூடிய சம்பவம்' என, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

நம் நாட்டின் பஞ்சாபை ஒட்டியுள்ள பாக்.,கின் நரோவால் மாவட்டத்தின் கர்தார்பூரில், சீக்கிய மத நிறுவனரான குருநானக்கின் சமாதியான குருத்வாரா தர்பார் சாஹிப் உள்ளது. இது, சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படுகிறது. பாக்.,கைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர், ஜவுளி நிறுவன விளம்பரத்துக்காக குருத்வாரா தர்பார் சாஹிப் முன் நின்று, விதவிதமாக சமீபத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இது சீக்கியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதோடு, கோயிலின் புனிதத்துக்கு களங்கம் விளைவித்ததாக சீக்கியர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, டில்லியில் உள்ள பாக்., துாதரக அதிகாரியை அழைத்து, மத்திய அரசு அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த புகைப்படங்களை நீக்கியதுடன், மாடல் அழகி மன்னிப்பும் கோரினார்.


latest tamil newsஇந்நிலையில், பாகிஸ்தானுக்கான இந்திய துாதரக அதிகாரியை நேரில் அழைத்து, பாக்., வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்தது.இது தொடர்பாக பாக்., வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: குருத்வாரா தர்பார் சாஹிப் முன், பாக்., மாடல் அழகி புகைப்படம் எடுத்துக் கொண்டது மிகவும் அரிதாக நடக்கக்கூடிய சம்பவம். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து விட்டோம்.

சிறுபான்மையினரின் உரிமைகளுக்கும், புனித தலங்களுக்கும் பாக்., அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.தங்கள் நாட்டில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது மற்றும் அவர்களின் புனித தலங்கள் சேதப்படுத்தப்படுவது போன்ற சம்பவங்களில் இருந்து, இந்திய அதிகாரிகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Salem,இந்தியா
03-டிச-202116:46:05 IST Report Abuse
Mohan படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்பதைப் போல 4/5 வாரங்களுக்கு முன்னர் இந்து கோயிலை இடித்து தள்ளிய பாக்கிஸ்தானியர் மீது நடவடிக்கை எடுக்காத இம்ரான் கான் அரசு ..இப்போது வேதம் ஓதுகிறது... நம்ம கெட்ட நேரம்
Rate this:
Cancel
yavarum kelir - yadhum vore ,இந்தியா
03-டிச-202113:41:58 IST Report Abuse
yavarum kelir இனி நாமும் அவர்கள்போல நம் சிறுபான்மையினரையும் மதிப்போமாக
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
03-டிச-202113:33:02 IST Report Abuse
S. Bharani தமிழ் நாட்டில் சிறுபான்மை என்பதற்கு வெவ்வேறு பொருள் உண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X