திருமங்கலம்,-திருமங்கலம் அருகே, 13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, தாயின் இரண்டாவது கணவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.வானகரத்தைச் சேர்ந்த, 34 வயது பெண், திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் மாதம் அளித்த புகாரில், தன் இரண்டாவது கணவர், தன் முதல் கணவர் வாயிலாக தனக்கு பிறந்த 13 வயது மகளுக்கு நீச்சல் கற்றுத்தருவதாகக் கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்காததால், செப்., 6ல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி, திருமங்கலம் மகளிர் போலீசார் விசாரித்து, 'போக்சோ' வழக்கு பதிவு செய்து, பெண்ணின் இரண்டாவது கணவரை தேடி வந்தனர். இந்நியைலில், கடந்த மாதம் குழந்தைகள் பாதுகாப்பு 'ஹெல்ப் லைன்' எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய பாதிக்கப் பட்ட சிறுமி, குற்றவாளியை கைது செய்வதில் போலீசார் தாமதமாக செயல்படுவதாக புகார் அளித்தார். சிறுமி பேசிய, 14 நிமிட 'ஆடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, தாம்பரத்தில் பதுங்கி இருந்த 36 வயதான, பெண்ணின் இரண்டாவது கணவரை திருமங்கலம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE