பாபர் வருகைக்கு முன் இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே: அசாம் முதல்வர்

Added : டிச 03, 2021 | கருத்துகள் (120) | |
Advertisement
புதுடில்லி: ''ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. முகலாய மன்னர் பாபர் வருவதற்கு முன், இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களாக தான் இருந்தனர்,'' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.இந்திய வம்சாவளிஅசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நேற்று அவர் கூறியதாவது: ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு
Assam CM, Himanta Biswa Sarma, BJP

புதுடில்லி: ''ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. முகலாய மன்னர் பாபர் வருவதற்கு முன், இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களாக தான் இருந்தனர்,'' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.


இந்திய வம்சாவளி


அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நேற்று அவர் கூறியதாவது: ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. உலகில் எந்த நாட்டில் ஹிந்துக்கள் வசித்தாலும், அவர்கள் இந்திய வம்சாவளியினராக தான் இருப்பர்.முகலாய மன்னர் பாபர் 1526ல் இந்தியாவுக்கு வந்தார். அதற்கு முன் வரை இந்தியாவில் ஹிந்துக்கள் மட்டுமே இருந்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டால், அவர்கள் எப்போது வேண்டு மானாலும் இந்தியாவுக்கு வரலாம்; அது, அவர்களது உரிமை.latest tamil newsமதவாதம்


கோவில் கட்டுவது, கோவிலை சீரமைப்பது ஆகிய பணிகள் மதவாதமாக கூறப்படுவது கண்டிக்கத்தக்கது. கோவில்கள் கட்டுவதும், சீரமைப்பதும் ஹிந்துக்களின் உரிமை. ஒரு ஹிந்துவால் மட்டுமே உண்மையான மதச்சார்பின்மைவாதியாக இருக்க முடியும். ஹிந்துத்வா என்பது ஒரு வாழ்க்கை முறை. இதை தடுக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது.5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஹிந்துத்வா இந்தியாவில் உள்ளது. இங்குள்ள கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களின் முன்னோர்கள் ஹிந்துவாகத் தான் இருந்தனர். இந்தியா இருக்கும் வரை ஹிந்துத்வாவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (120)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivek c mani - Mumbai,இந்தியா
03-டிச-202122:39:17 IST Report Abuse
vivek c mani தங்கள் மூதாதையரை பற்றி உண்மையாக இந்துக்கள் என ஒப்புக் கொள்ளும் இந்தோனேசியா நாட்டிலிருந்து இவர்கள் பாடம் படித்தால் சுயநிலைக்கு வருவார்கள்.
Rate this:
Cancel
Naresh Giridhar - Chennai,இந்தியா
03-டிச-202120:33:07 IST Report Abuse
Naresh Giridhar அவனவன் தனக்கு விரும்பிய மாதிரி, தனது கொள்கைகளுக்கு ஏற்ப புதிய சரித்திரம் உளறுவது இப்பொழுது ஒரு பொழுது போக்காக ஆகிவிட்டது. சிந்து என்பதற்கும் ஹிந்து என்பதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாத ஒருவரின் வேடிக்கையான கூற்று .
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
03-டிச-202120:28:11 IST Report Abuse
elakkumanan ஏம்பா திருஞானம், அஸ்ஸாம் முதல்வரின் வயசு ஏழாயிரமா என்ற உங்கள் கேள்வியின் தொடர்ச்சியாக சில கேள்விகள் எழுந்து வந்திடுச்சு தம்பி... முடிஞ்சா , சொல்லுங்க...பாபர் வரவுக்கு முன்னாள் எல்லாம் இந்து ன்னு சொல்லனும்னா வயசு ஏழாயிரம் இருக்கணும்..சரியா யோசிக்கிறீங்க.. அப்போ, இந்து மதம் ஒரு மதமே இல்லைனு சொன்ன, ராமர் எந்த காலேஜில் பிடிச்சார்ன்னு கேட்ட, ராமாயணம் உண்மையான்னு கூவுன, கடவுள் இல்லவே இல்லை ன்னு சொன்ன, சொல்லுற அதி தீவிர கழிவுகளுக்கெல்லாம் ஒரு அம்பதாயிரம் வயசு இருக்குமா... அவ்வளவு எதுக்கு தம்பி... தமிழ் புத்தாண்டு தை மாதம் னு கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு ஒரு பத்தாயிரம் வயசு இருக்குமா? நேர்மையா, உருப்படியா, முடிஞ்சா, பதில் சொல்லுங்க தம்பி... நமக்கு தெரியாத , புரியாத , எதிரான, பயன்படாத , உண்மையான, நேர்மையான , ஒழுக்கமான விஷயம் எதுவா இருந்தாலும் பகுத்தறிவு மற்றும் திருட்டு கட்சி வழக்கப்படி அதெல்லாம் மூடநம்பிக்கை தான்.. புரியுதா தம்பி.. சமசீர் தம்பி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X