பிரதமர் வரை பழக்கம் எனக்கூறி ரூ.90 லட்சம் மோசடி: இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Added : டிச 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்:பால் நிறுவனத்தில் ரூ.400 கோடி கறுப்பு பணம்புதுடில்லி: மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள பால் பொருட்கள் தயாரித்து விற்கும் ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான 12க்கும் மேற்பட்ட இடங்களில், சமீபத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.அந்த நிறுவனம் கணக்கில் காட்டாத 400 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
Crime Roundup, Murder, Arrest


இந்திய நிகழ்வுகள்:பால் நிறுவனத்தில் ரூ.400 கோடி கறுப்பு பணம்

புதுடில்லி: மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள பால் பொருட்கள் தயாரித்து விற்கும் ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான 12க்கும் மேற்பட்ட இடங்களில், சமீபத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.அந்த நிறுவனம் கணக்கில் காட்டாத 400 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.


பெண் நிர்வாண படம்: கம்யூ., பிரமுகர் கைது

திருவில்லா: கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கிளைச் செயலராக இருப்பவர் சி.சி.ஷாஜிமோன். இவரும், இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு தலைவர் நாசர் என்பவரும், மார்க்சிஸ்ட் கம்யூ., பெண் உறுப்பினர் ஒருவரை காரில் அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
அத்துடன் அந்த பெண்ணை நிர்வாணமாக்கி படமெடுத்து, 2 லட்சம் ரூபாய் தராவிட்டால் இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தபோதிலும், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியதை அடுத்து, போலீசார் ஷாஜிமோனை கைது செய்தனர். இந்த வழக்கில் நாசர் உட்பட, ஆபாச வீடியோவை வெளியிட உதவிய 11 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தமிழக நிகழ்வுகள்:


மாசு கட்டுப்பாட்டு வாரிய 'மாஜி' தலைவர் தற்கொலை

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கிய, ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரியும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவருமான வெங்கடாசலம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம், 63. ஐ.எப்.எஸ்., அதிகாரியான இவர், வனத்துறையில் சென்னை உட்பட பல இடங்களில் பணிபுரிந்தார். சுற்றுச்சூழல் இயக்குனராக பணிபுரிந்து, 2018ல் ஓய்வு பெற்றார். முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 2019ல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப் பட்டார். இவர் அதிகார துஷ்பிரயோகம் செய்து, தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க, 5 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கி குவித்துஉள்ளார்.
அதேபோல, ஊழியர்கள் நியமனத்திலும் பல லட்சம் ரூபாய் வசூல் வேட்டை நடத்தி உள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வெங்கடாசலம் மீது, செப்., 23ல், வழக்கு பதிவு செய்தனர்.மறுநாள், சென்னை கிண்டியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகம், வேளச்சேரியில் உள்ள வெங்கடாசலத்தின் சொகுசு பங்களா; சேலம் மாவட்டம் ஆத்துார், அம்மம்பாளையத்தில் உள்ள பூர்வீக வீடு உள்பட ஐந்து இடங்களில், இரண்டு நாட்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில், 11 லட்சம் ரூபாய் ரொக்கம், 11 கிலோ தங்கம், 15.25 கிலோ சந்தன மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள், 4 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். சென்னை வேளச்சேரி செகரட்ரியேட் காலனி, 2வது தெருவில் உள்ள, சொகுசு பங்களாவில் மனைவி சாந்திஉடன் வசித்து வந்தார்.
வெங்கடாசலம் நேற்று மதியம், மாடியில் உள்ள தன் அறையில் இருந்துள்ளார். அப்போது, வேலைக்கார பெண் செல்வி மதிய உணவு எடுத்துச் சென்று திரும்பி உள்ளார்.அதன் பின், கதவை பூட்டிய வெங்கடாசலம் மாலை 5:30 மணி வரை வெளியே வரவில்லை. இதனால், சாந்தி மற்றும் செல்வி ஆகியோர் கதவை தட்டி உள்ளனர். கதவை திறக்கவில்லை.
போலீசார் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது, வெங்கடாசலம் மதிய உணவு உட்கொள்ளாமல், வேட்டியால் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். வேளச்சேரி போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


latest tamil news
ரூ.4.53 லட்சம் பறிமுதல்

குன்னுார்: நீலகிரி மாவட்டம், குன்னுார் ஜெகதளா பேரூராட்சியில் விதிமீறிய கட்டடங்கள் அதிகளவில் கட்டப்பட்டு வரும் நிலையில், லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுந்தன. நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு கிடைத்த புகார்படி, டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர், நேற்று அலுவலகத்தில் திடீர் சோதனை செய்தனர்.இதில் கணக்கில் வராத, 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. உதவியாளர் கருமலையப்பன், ஊழியர் கிருத்திகா ஆகியோரிடம் விசாரணை நடந்தது.


நண்பனை கொன்றவர் சரண்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை வீரப்பனுாரைச் சேர்ந்தவர் திருப்பதி, 41. இவர் 2018 ஜூலை 8ல் உறவினரை பார்த்து வருவதாக பைக்கில் சென்றவர் வீடு திரும்பவில்லை. புகார்படி ஜமுனாமரத்துார் போலீசார் விசாரித்து வந்தனர்.சில நாட்களுக்கு முன், ஜவ்வாதுமலை பலாக்கனுாரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராமசாமி, 40, புலியூர் வி.ஏ.ஓ.,விடம் சரணடைந்து, வாக்குமூலம் அளித்தார். ராமசாமியும், திருப்பதியும் நண்பர்கள். ராமசாமி மனைவிக்கும், திருப்பதிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. 2018ல் திருப்பதியை ராமசாமி கொலை செய்து தன் வீட்டின் பின்புறம் புதைத்தது தெரிந்தது. போலீசார் ராமசாமியை கைது செய்தனர்.


கிராமத்திற்குள் புகுந்த முதலை

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், கேப்பர்மலை பகுதியில் உள்ள வெள்ளக்கரை கிராமத்தை சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் வெள்ளக்கரை கிராமத்தில் சாலையோரம் முதலை ஊர்ந்தபடி வந்தது. கிராம மக்கள், பாம்பு பிடிக்கும் செல்லா என்பவர் உதவியுடன் முதலையை வலை போட்டு பிடித்தனர். நேற்று காலை முதலையை, வனத்துறையினர் வக்காரமாரி ஏரியில் விட்டனர்.


8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பத்துார்: திருப்பத்துார் வருவாய்த் துறையினர் மாடப்பள்ளி அண்ணா நகரில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள வயல் வெளியில் பதுக்கி வைத்திருந்த, 8 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சிந்தனைசெல்வம், 21, என்பவர் ஆந்திர மாநிலம், குப்பத்திற்கு கடத்திச் செல்ல பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


ரூ.90 லட்சம் மோசடி; இருவருக்கு வலை

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 26. இவருக்கும், இவரது நண்பர்கள் ஒன்பது பேருக்கும் அரசு வேலை, வங்கி கடன் பெற்றுத் தருவதாக கூறி, மயிலாடுதுறையைச் சேர்ந்த மணி வெங்கடகிருஷ்ணன், அவரது தந்தை நாராயணசாமி ஆகியோர் 2019ல் மதுரை ஓட்டல் ஒன்றில் சந்தித்தனர்.'பா.ஜ., மேல்மட்ட தலைவர்கள் முதல் பிரதமர் மோடி வரை எங்களுக்கு பழக்கம்' எனக் கூறி 90 லட்சம் ரூபாய் பெற்றனர். இரு ஆண்டுகளாக வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் மோசடி செய்தனர். புகார்படி, இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


103 சவரன் கொள்ளையில் நால்வர் கைது

பெரம்பலுார்: பெரம்பலுாரில் ஆனந்த் ஜூவல்லர்ஸ் நடத்தி வருபவர் கருப்பண்ணன், 65. நவம்பர் 26ல், இவரது வீட்டில் புகுந்த முகமூடி அணிந்த மூன்று மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, 103 சவரன் நகை, 9 கிலோ வெள்ளி, 10 ஆயிரம் ரூபாய், வாசலில் நின்றிருந்த காரை கொள்ளையடித்து தப்பினர்.நேற்று முன்தினம் இரவு, பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்டில் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற மூவரில் இருவரை விரட்டி பிடித்தனர். விசாரணையில், கருப்பண்ணன் வீட்டில் கொள்ளை அடித்த செந்தில்குமார், 36; ஆனந்தன், 46 என்பது தெரிந்தது.திருடிய பொருட்களை மறைத்து வைத்த குற்றத்துக்காக செந்தில்குமாரின் தாய் ராஜேஸ்வரி, 58; இரண்டாவது மனைவி மஞ்சு, 34 ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.


மாணவிக்கு தொல்லை; கல்லுாரி பேராசிரியர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்: கல்லுாரி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பேராசிரியரை, ஸ்ரீவில்லிபுத்துார் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தனியார் கல்லுாரி பேராசிரியர் டென்சிங் பாலையா, 45; கல்லுாரியின் என்.சி.சி., பொறுப்பாளராகவும் உள்ளார். மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். மாணவி தரப்பில், ஸ்ரீவில்லிபுத்துார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி., சபரிநாதன், இன்ஸ்பெக்டர் கீதா, நேற்று முன்தினம் இரவு முதல் டென்சிங் பாலையாவிடம் பல மணி நேரம் விசாரணை செய்தனர். பின், அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


பிரதமர் வரை பழக்கம் எனக்கூறி ரூ.90 லட்சம் மோசடி

மதுரை:பா.ஜ., தலைவர்கள் முதல் பிரதமர் வரை தனக்கு பழக்கம் எனக்கூறி அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.90 லட்சம் பெற்று மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் மம்சாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் 26. அரசு வேலைக்கு முயற்சித்து வந்தார். இவருக்கும், இவரது நண்பர்கள் 9 பேருக்கும் அரசு வேலை, வங்கி கடன் பெற்றுத்தருவதாக கூறி மயிலாடுதுறை மணிவெங்கடகிருஷ்ணனும், அவரது தந்தை நாராயணசாமியும் 2019ல் மதுரை ஓட்டல் ஒன்றில் சந்தித்தனர்.
பா.ஜ., மேல்மட்ட தலைவர்கள் முதல் பிரதமர் மோடி வரை தங்களுக்கு பழக்கம் எனக்கூறி மொத்தம் ரூ.90 லட்சம் பெற்றனர். இரு ஆண்டுகளாக வேலை வாங்கித்தராமலும், பணத்தை திருப்பித்தராமலும் மோசடி செய்தனர். இருவர் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


உலக நிகழ்வுகள்:


கொலை வழக்கு: 13 பேருக்கு மரண தண்டனை

டாக்கா:வங்கதேசத்தில் ஆறு மாணவர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் 10 ஆண்டுகளுக்கு முன், 'ஷாப் - இ - பரத்' விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் ஏழு பேர் 'அமின் பஜார் பாலம்' பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அவர்களை திருடர்கள் எனக் கருதி அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அடித்து உதைத்தனர். இதில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒருவர் படுகாயம் அடைந்தார். 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட 57 பேரில் 13 பேருக்கு டாக்கா கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இது தவிர 19 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 25 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.


வெடிகுண்டு புரளியால் விமானம் தரையிறக்கம்

டாக்கா:மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 'மலேஷிய ஏர்லைன்ஸ்' விமானம் 135 பயணியருடன் வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு புறப்பட்டது.
நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக வங்கதேச பயங்கரவாத தடுப்பு போலீசுக்கு தகவல் கிடைத்தது.தரை கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமானியை தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க உத்தரவிட்டனர். விமானி, டாக்கா அருகே குர்மிடோலா ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார்.
உடனடியாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோருடன் பாதுகாப்பு படையினர் விமான நிலையத்தை சுற்றி வளைத்தனர்.பயணியர் பத்திரமாக இறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். இதையடுத்து, விமானத்தில் மேற்கொண்ட சோதனையிலும் வெடிகுண்டு அல்லது அது போன்ற எந்த பொருளும் இல்லை என்பதும், அது புரளி என்பதும் தெரிய வந்தது. இதனால் விமான போக்குவரத்து மூன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
03-டிச-202113:22:01 IST Report Abuse
raja "ஷாஜிமோன், நாசர்" பெற பாத்திகளா? ஒருத்தன் கிருத்துவன் இனொரூத்துத்தன் முஸ்லிம்... திருந்த மாட்டானுவோ போல......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X