பணம் தான் தண்ணீராக செலவழிக்கப்பட்டதே தவிர, தண்ணீர் போக வழியில்லாமல் போய் விட்டதே!

Updated : டிச 03, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி: பா.ஜ., போல ஏதாவது ஒரு இடத்தில் நிவாரண உதவி வழங்கி வருபவர்கள் நாங்கள் இல்லை. நாள் முழுதும் நிவாரண உதவி வழங்கி வருகிறோம். ஸ்டாலின் தலைமையிலான எங்கள் அரசு நேர்மையான முறையில் செயல்பட்டு வருகிறது.நிவாரண உதவி வழங்குவது பெரிதல்ல. அத்தகைய நிலை ஏற்படாத வண்ணம், வௌ்ள நீர் வழிந்தோட ஏற்பாடு செய்வது தான் சிறந்த ஆட்சி. 50 ஆண்டு
சேகர்பாபு, சுப்ரமணியசாமி

ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி: பா.ஜ., போல ஏதாவது ஒரு இடத்தில் நிவாரண உதவி வழங்கி வருபவர்கள் நாங்கள் இல்லை. நாள் முழுதும் நிவாரண உதவி வழங்கி வருகிறோம். ஸ்டாலின் தலைமையிலான எங்கள் அரசு நேர்மையான முறையில் செயல்பட்டு வருகிறது.


நிவாரண உதவி வழங்குவது பெரிதல்ல. அத்தகைய நிலை ஏற்படாத வண்ணம், வௌ்ள நீர் வழிந்தோட ஏற்பாடு செய்வது தான் சிறந்த ஆட்சி. 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில், பணம் தான் தண்ணீராக செலவழிக்கப்பட்டதே தவிர, தண்ணீர் போக வழியில்லாமல் போய் விட்டதே!பா.ஜ.,வில் அதிருப்தியுடன் இருக்கும் ராஜ்யசபா எம்.பி., சுப்ரமணியசாமி அறிக்கை: 'பிரதமர் மோடியின் ஆட்சியால் ஈர்க்கப்பட்ட இந்தியர்கள் ஏராளமானோர் தாய்நாடு திரும்பி வருகின்றனர்' என்கின்றனர். ஆனால், ஆறு லட்சம் பேர், இந்திய குடியுரிமை வேண்டாம் என நிராகரித்துள்ளனர்; அது ஏன்?


எங்கேயோ தோண்டி, துருவி புள்ளிவிபரத்தை எடுத்துள்ளீர்கள். தமிழகத்திலிருந்தோ அல்லது டில்லியிலிருந்தோ யாரும் நிச்சயம் குடியுரிமை வேண்டாம் என சொல்லி இருக்க மாட்டார்கள். எனவே, உங்கள் புள்ளிவிபரத்தால் எந்த பாதிப்பும் இல்லை!தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் தலை சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வாகியுள்ளது என, தமிழக அரசு பெருமிதம் தெரிவிக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில், சென்னையை வெள்ளத்தில் மிதக்க விட்டு விட்டனரே!


latest tamil news
'இனி எத்தகைய வௌ்ளம் வந்தாலும், துளி கூட பாதிப்பு இல்லாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது; பார்ப்போம், அவர்களின் செயல்திறனை!விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: ஆணவமாக செயல்படுவது என் இயல்பு இல்லை என்பது பலருக்கும் தெரியும். எமக்குள் தலைவன்- - தொண்டன் உறவில்லை; அண்ணன்- - தம்பி உறவே இருக்கிறது. இயக்கமே என் குடும்பம்! இயக்கத் தோழர்களே எனது உறவினர்கள். காய்ச்சல், தலைவலி என படுத்தாலும் இவர்களே எனக்கு துணை.


இருந்தாலும், தம்பிகள் அனைவரும் கழிவு நீரில் நிற்க, நீங்கள் அவர்கள் தோளை பிடித்து, சேரில் நடந்து, காருக்குள் குதித்தீர்களே... அப்போது, தம்பிகளை பற்றி நினைக்கவில்லையா?இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை
: தமிழகத்தில் எந்த ஒரு தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் மழை நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பு தொடராமல் இருக்க நாம் முயற்சிக்க வேண்டும். பன்னாட்டு கட்டுமான தொழில் ஆலோசகர்களிடம் கலந்தாலோசித்து, தொலைநோக்கு பார்வையுடன் தமிழக அரசு செயல்பட வேண்டும்.


பன்னாட்டு கட்டுமான வல்லுனர்கள் புதிய சட்டசபை வளாகம் போல அருமையான ஏற்பாடுகளை செய்வர். ஆனால், அதை மருத்துவமனையாக மாற்றியது போல, நம்மவர்கள் மாற்றி விடுவரே!


Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-டிச-202114:02:28 IST Report Abuse
வேதவல்லி கோயில் விஷயத்தில், காலங்காலமாய் வரும் வரலாற்று விஷயத்தில் தான் தோன்றித்தனமாக திக கும்பல் பேச்சை கேட்டு மாற்றம் செய்யாதீர்கள் இயற்கையின் சீற்றம் குறையும்.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
03-டிச-202111:51:53 IST Report Abuse
Suppan இரண்டு கழகங்களும் சேர்ந்து நீர்வழிப்பாதைகளை ஆக்ரமித்து சென்னையைச் சீரழித்தது எல்லோருக்கும் தெரியும். சேகர் பாபு அவர்களே நேர்மைக்கும் திமுகவுக்கும் வெகு வெகு தூரம் என்பதை மக்கள் அறிவார்கள். கீழ்க்கண்ட கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது முதல்வரோ பதில் சொல்வார்களா? 1. மழைக்காலத்தில் கழிவுநீர் கட்டுமானங்களை நிறுத்தினீர்களா? நிறுத்தாதற்கு காரணங்கள் என்ன? கட்டிங் சம்பந்தப்பட்டதா? 2. தண்ணீர் கடலில் சேரும் முகத்துவாரங்களை அடைத்தது சரியா? 3. கழிவுநீர் செல்லும் பாதைகளை முழுவதும் தூர் வாராதது சரியா? 4. அந்த குடிநீர் கழிவுநீர் சம்பந்தப்பட்ட பொறியாளர்களை மழைக்காலத்தில் பணி மாற்றம் செய்தது சரியா? 4. அந்த இடங்களில் வேறு பொறியாளர்களை மாற்றினீர்களா/ நியமனம் செய்தீர்களா? அவர்களுக்கு கிடப்பில் போடப்பட்ட தூர் வாருதல் சம்பந்தப்பட்ட வேலைகள் தெரிவிக்கப்பட்டதா?
Rate this:
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
03-டிச-202114:52:25 IST Report Abuse
M S RAGHUNATHANகடந்த ஐம்பது வருடங்களில் எவ்வளவு பாதாள சாக்கடை திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டது ? அதில் எவ்வளவு முடிக்கப் பட்டது ? திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது ? எவ்வளவு நாட்களில் முடிக்கப் பட வேண்டியது ? கடைசியில் எவ்வளவு செலவானது ? என்ன காரணம் ? தாமதத்திற்கு யார் காரணம் என்று கண்டறியப்பட்டதா ? அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதா ? இல்லையென்றால் ஏன் ? தரக்குறைவான வேலைகளை செய்த ஒப்பந்தக்காரர்கள் மேல் கிரிமினல் வழக்கு ஏன் தொடரப்படவில்லை ? இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஊழல். இதில் முதன்மையாக தண்டிக்கப் படவேண்டியவர்கள் பொறுப்பில் இருந்த உயர் அதிகாரிகள்....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
03-டிச-202111:34:25 IST Report Abuse
raja இவ்வளவு பட்டும் சென்னை மக்கள் விடியளுக்குத்தான் ஓட்டுபோடுவான். அனுபவிக்கட்டும். விடியலின் இந்த ஆறுமாத கால ஆட்சியே தமிழகத்தின் ஒரு இருண்டகாலம் என்று சொல்லலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X