பொது செய்தி

தமிழ்நாடு

"பயப்படாதீங்க... எச்சரிக்கையா இருங்க" - சுகாதார துறை அமைச்சர்

Updated : டிச 03, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: புதிய ஒமைக்ரான் பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் பேசுகையில் கூறினார்.தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு வந்துள்ளதாக சிலர் வதந்திகைள பரப்பி விடுகின்றனர். இது பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இன்று சுகாதார துறை அமைச்சர்

சென்னை: புதிய ஒமைக்ரான் பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் பேசுகையில் கூறினார்.



latest tamil news



தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு வந்துள்ளதாக சிலர் வதந்திகைள பரப்பி விடுகின்றனர். இது பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இன்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் வராமல் தடுக்க முழு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் கூடுதல் உஷாராக இருக்குமாறு பணித்துள்ளோம். வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.ஒமைக்ரான் வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட வேண்டியது இல்லை. ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதனைத்தான் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


latest tamil news



திருச்சியிலும், சென்னையிலும் வந்து ஒமைக்ரான் விட்டதாக தவறான தகவல் பரப்பி விடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கு கோவிட் பாசிட்டிவ் வந்துள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மரபியல் ரீதியிலான சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளோம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
03-டிச-202114:25:36 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் அரசுக்கென்று இருக்கும் கொள்கைப்படிதான் அமைச்சரோ, அதிகாரிகளோ சொல்வார்கள் எந்த அரசும் பீதி ஏற்படுவதை விரும்பாது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதையே விரும்பும் அதன்படி பார்த்தால் இவர் சொன்னதில் தவறில்லை
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
03-டிச-202113:07:43 IST Report Abuse
KavikumarRam ஹலோ சுகாதார அமைச்சரே ஐந்தே பதில் எங்களுக்கும் தெரியும். நீங்க என்ன முன்னெச்சரிக்கை பின்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கீங்க. அத சொல்லுங்கய்யா. இத சொல்றதுக்கு அமைச்சர் எதுக்கு. என்க வீட்டு ஆயாவே சொல்லுமே.
Rate this:
Cancel
03-டிச-202110:32:57 IST Report Abuse
அப்புசாமி மடத்தனமான பேச்சு. பயம் வந்தா தான் எச்சரிக்கையா இருப்பாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X