சென்னை: புதிய ஒமைக்ரான் பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் பேசுகையில் கூறினார்.

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு வந்துள்ளதாக சிலர் வதந்திகைள பரப்பி விடுகின்றனர். இது பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இன்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் வராமல் தடுக்க முழு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் கூடுதல் உஷாராக இருக்குமாறு பணித்துள்ளோம். வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.ஒமைக்ரான் வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட வேண்டியது இல்லை. ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதனைத்தான் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

திருச்சியிலும், சென்னையிலும் வந்து ஒமைக்ரான் விட்டதாக தவறான தகவல் பரப்பி விடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கு கோவிட் பாசிட்டிவ் வந்துள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மரபியல் ரீதியிலான சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளோம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE