பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணா, எம்.ஜி.ஆர்., பல்கலைகள் ரூ.50 கோடி ஜி.எஸ்.டி., ஏய்ப்பு

Updated : டிச 03, 2021 | Added : டிச 03, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை: ஜி.எஸ்.டி., பதிவு எண் பெறாமல், நான்கு ஆண்டுகளாக வரி செலுத்தாமல், அண்ணா மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைகள், 50 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை அண்ணா பல்கலை, சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனம். தேசிய உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,யை விட, அண்ணா பல்கலையின் ஆராய்ச்சிகளுக்கு,
Anna University, DrMGR University, GST, அண்ணா பல்கலை, எம்ஜிஆர் பல்கலை, ஜிஎஸ்டி, வரி ஏய்ப்பு

சென்னை: ஜி.எஸ்.டி., பதிவு எண் பெறாமல், நான்கு ஆண்டுகளாக வரி செலுத்தாமல், அண்ணா மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைகள், 50 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை அண்ணா பல்கலை, சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனம். தேசிய உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,யை விட, அண்ணா பல்கலையின் ஆராய்ச்சிகளுக்கு, தொழில் துறையினர் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதேபோல, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையும், அரசின் அனைத்து மருத்துவ கல்லுாரிகள் செயல்படுவதற்கான பாடத்திட்டங்களையும், அதற்கான நடைமுறைகளையும் வழங்கி வருகிறது. இந்த இரண்டு பல்கலைகளும், ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தியது முதல், இதுவரை வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருகின்றன.


அண்ணா, எம்ஜிஆர் பல்கலைக்கழகங்கள் ரூ.50 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு | University 50 Crore GST Evasion

latest tamil newsஇதுகுறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:கல்லுாரிகள், பல்கலைகள் வழங்கும் சேவைக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,யை, சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் செலுத்த வேண்டும். கல்லுாரிகளிடம் இருந்து பெறும் வரியை, அரசுக்கு அண்ணா பல்கலையும், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையும் செலுத்த வேண்டும். ஆனால், இரண்டு பல்கலையும் இதுவரை, பொது ஜி.எஸ்.டி., பதிவு எண் பெறாமல், கணக்கு விபரங்களை பராமரித்து வருகின்றன. விசாரணையில், அண்ணா பல்கலை 30 கோடி ரூபாய்; மருத்துவ பல்கலை 20 கோடி ரூபாய் என, 50 கோடி ரூபாய் வரை வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளன.

இதுகுறித்து, நோட்டீஸ் அனுப்பியும் பல்கலைகள் இதுவரை வரி செலுத்தவில்லை. அவ்வாறு செலுத்தவிட்டால்,வரி ஏய்ப்புக்கு நிகரான அபராதம் விதிக்கப்படும்.இந்த தொகையை செலுத்த அறிவுறுத்தி, மூன்று மாதங்கள் கடந்தும், சம்பந்தப்பட்ட பல்கலைகள் செலுத்த முன்வரவில்லை. இதர பல்கலைகள் அனைத்தும்,முறையாக வரி செலுத்துகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
03-டிச-202121:55:53 IST Report Abuse
Tamilan வியாபார சார்ந்த பொருளாதார உலகில் அனைத்தும் வியாபாரமாகிவிட்டது .
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
03-டிச-202120:16:07 IST Report Abuse
spr இவை சேவை வருக்குப் பதிவு செய்யாமலிருந்தது பெயர் ,மகிமையோ என்னவோ ஆனாலும் இந்தப் பல்கலைக் கழகங்கள் சேவை வரியை எதிர்த்து வழக்குத் தொடுத்திருக்க வேண்டும் கல்வி மருத்துவம் காவற்துறை பாதுகாப்புத் துறை போன்றவை தொழிலல்ல அவை பொதுச் சேவை/அரசின் கடமை என்ற வகையில் மக்களுக்கு இலவசமாக இல்லாவிடினும் குறைந்த கட்டணத்தில் கொடுக்கப்பட வேண்டும் அந்த வகையில், சேவைக்கு வரி என்பதே தவறு வியாபாரம் செய்து அதில் ஆதாயம் காண்பவர் விற்பவர் என இவர்கள் செலுத்தும் வரி அதனை அனுபவிப்பவரிடமிருந்துதான் பெறப்படுகிறது விற்பனை வரியும் கொடுத்து சேவை வரியையும் கொடுப்பது மக்களின் மேல் திணிக்கப்படும் இரட்டை வரி முறை விற்பவரோ சேவை புரிந்து ஆதாயம் காண்பவர் அவரது வருமானத்திலிருந்துதுதான் வரி கட்ட வேண்டும் எனவே அரசு சேவை வரியையாவது ரத்து செய்ய வேண்டும் இது தொடர்ந்தால் மனைவி கணவனுக்கும் குடும்பத்த தலைவன் தனது குடுமபத்தவருக்கும் செய்யும் சேவைகளுக்கு வரி கட்ட வேண்டுமென சொல்லப்படுமோ ஏற்கனவே வங்கியில் நகைக்கடன் கோரும் வேலைக்குப் போகாத வருமானமில்லா பெண்களும் வருமான வரி அட்டை காட்ட வேண்டும் என்பதே தவறு ஒரு வங்கியில் மேலாளர் கடன் கோரி விண்ணப்பித்த பெண்களிடம் வருமான வரி அட்டை வேண்டுமென்றாராம் அவர்கள் எங்களுக்குத்தான் வருமானமே இல்லையே என்று சொல்ல அப்படி உங்களுக்கு வருமானமில்லாமல் நீங்கள் எப்படி சாப்பிட முடிகிறது என்றாராம் ஒரு பெண் அது எங்கள் கணவர் அளிக்கிறார் என்றதற்கு அதுதான் உங்கள் வருமானம் எனவே அதற்கு வருமான வரி என்றாராம் இதனையெல்லாம் முன்னெடுத்து எவரும் பேராடுவதில்லையே
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
03-டிச-202116:29:13 IST Report Abuse
DVRR மிக்க நன்றி இது தான் திருட்டு திராவிட சித்தாந்தம் என்று சொல்லும் அண்ணா எம் ஜி ஆர் என்றால்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X